வடலூரில்152வது ஆண்டு தைப்பூச விழாவாக நடைப்பெற்றது, 2 லட்சம் பேர்கள் திரண்டனர்,
கடலூர், மாவட்டம்
வடலூர் பார்வதிபுரம் கிராமத்தில் உள்ள அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச விழா ஜோதி தரிசனம் நடைபெறுகிறது, இந்த ஆண்டு 152 ஆண்டு தைப்பூச விழாவாக நடைப்பெற்றது,. இதன் தொடக்கமாக ஜனவரி 28ந்தேதி முதல் 30ந்தேதி வரை தருமச்சாலையில் மகாமந்திரம் ஒதப்பட்டது, ஜனவரி 31ந்தேதி முதல்பிப்ரவரி 3ந் தேதி வரை ஞான சபையில் அருட்பா முற்றோதல் நடைபெற்றது.
கொடியேற்றம்.
இன்றுறு பிப்ரவரி 4ந்தேதி காலை 5 மணி மணிக்கு அகவல் பாராயணமும், 7.30 மணிக்கு,வள்ளலார் பிறந்த மருதூர்,
தண்ணீரால்விளக்குஎரித்தகருங்
குழியிலும்.வள்ளலார்சித்தி
பெற்றமேட்டுக்குப்பத்திலும்,
தருமச்சாலையிலும் சன்மார்க்க கொடி ஏற்றம் நடைபெற்றது
, ஞானசபையில் கொடி ஏற்றம்
காலை10மணிக்கும் பார்வதிபுரம் கிராம மக்கள் சார்பில் நடைபெற்றது
, இரவு தருமச்சாலை மேடை
யில் சன்மார்க்க சொற்பொழிவும் கலைநிகழ்ச்சிகள்நடைபெறும் .
ஜோதி தரிசனம்;
இன்று ஞாயிறு
(5ந்தேதி)தைப்பூச திருவிழா வையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 6மணி10மணி,பகல்1மணி
இரவு 7மணி10மணி
மறுநாள் திங்கள்காலை5.30 மணிக்கும்,ஆக 6காலம்,7திரைநீக்கியஜோதி
தரிசனம் நடைபெற்றது. தரிசனத்தின் சன்மார்க்க அன்பர்கள் பக்தி பரவசத்துடன், அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி, என்கிற மகாமந்திர ஒலி , ஞானசபை திடல் எங்கும், ஓங்கி ஓலித்தது,
இதனை கானதமிழகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள்
லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் வழக்கம்போல திரண்டு வந்து ஜோதி தரிசனம் பார்த்தனர்,
இதற்காக தமிழகத்தின்பல
பகுதியில் சிறப்பு பேருந்துகள்
மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது
தைப்பூசத்தன்றுகாலை 10 மணிக்கு தருமச்சாலைமேடை
யில் சிறப்பு நிகழ்வுகள்மாவட்ட
அறநிலையத் துறையின்அதி
காரிமுன்னிலையிலும்,
அதிகாரிகள்,சன்மார்க்க அறிஞர்
கள் உரையாற்றினார்கள்
தமிழக வேளாண்மைத்துறை
அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்,மற்றும் முன்னாள் அமைச்சர் எம்சி சம்பத்,
, எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன், மற்றும்
மாவட்டத்தின் அரசு
உயர்நிலை அதிகாரிகள்,
உட்பட பலர் ஜோதி தரிசனம் பார்த்தனர்.
சித்தி பெற்ற திருஅறைதரிசனம்
தைப்பூச விழா விற்கு பின்னர்
ஒருநாள் இடைவெளிவிட்டுபிப்ர
வரி 8ந்தேதிதிங்கள்கிழமைபகல்
12மணிமுதல்மாலை6மணிவரை
மேட்டுக்குப்பத்தில் உள்ள,வள்ள
லார் சித்திப்பெற்ற திரு அறை
தரிசனம் நடைபெறுகிறது.
முன்னதாக வடலூர் ஞான சபையில் இருந்து வள்ளலார் பயன் படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்திபெற்றதிருஅறை
உள்ள மேட்டுக்குப்பம் கொண்டு
செல்லப்படும்.அங்கு பக்தர்கள்
வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும்
வடலூர் கொண்டு வரப்படும்
தைப்பூச திருவிழா வையொட்டி
பல் வேறு சன்மார்க்க சங்கத்தின
ர்களும், சொற்பொழிவுகள், இசை
நிகழ்ச்சி.நாடகம் உள்ளிட்ட பல
கலைநிகழ்ச்சிகள் நடைபெறு
கிறது.
விழாகடைகள்:
தைப்பூச விழாவையொட்டி பிரமாண்ட கடை வீதிகள் அமைக்கப்படுகின்றன கடைகளில் அலுமினிய பாத்திரங்கள் பித்தளை பாத்திரங்கள் பிளாஸ்டிக் பொருட்கள் சிறுவர்கள் விளையாட்டு பொருட்கள் பழக்கடைகள் அவல் பொரி கடை அவல் பொறி கடைகள், டெல்லி அப்பளம் கடைகள் . கரும்பு
வியாபாரம் நடைபெற்றது.
தைப்பூச விழாவில் பிரம்மாண்ட கடைத்
தெருக்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது, தைப்பூச ஜோதி தரிசனத்தை காண, 2லட்சத்திற்கு மேலான சன்மார்க்க அன்பர்கள், பொதுமக்கள் திரண்டு வந்ததாக,’சன்மார்க் அறிஞர்கள் கூறினார்கள், திருட்டு, உள்ளிட்ட அசாம் விதம், ஏதும் நடக்காமல் இருக்க, டிஐஜி பாண்டியன் தலைமையில், போலிஸ் சூப்பிரண்டுள்-டிஎஸ்பிகள், காவலர்கள் உள்ளிட்ட 900 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், 60 இடத்தில் கண்காணிப்பு கேமரா, 10 இடத்தில்கண்காணிப்பு மேடையும் அமைக்கப்பட்டு இருந்தது,
பக்தர்கள் வாகனத்தில் குவிந்ததால், மதியம் 1 மணி முதல், உள்ளுர் மற்றும் வெளியூர் வாகனத்தில் வடலூரில் போக்குவரத்து பாதிப்பு, வாகன ஓட்டிகள், பக்தர்கள், பொதுமக்கள், பெறும் அவதிக்கு உள்ளானர்,
“வழக்கம் போல், பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்காமல், வாக்குவாதம் செய்த காவல்துறையினர், காவல்துறையினரின் உறவினர்கள் மட்டும்செல்ல அனுமதிக்கப்பட்டனர்”
இதற்கான ஏற்பாடுகளை வள்
ளலார் தெய்வநிலையம்,உதவி ஆணையர் சந்திரன்,செயல்அலுவலர் ராஜாசரவணக்குமார் மற்றும் பார்வதி பரம், மேட்டுக்குப்பம், கருங்குழி, மருதூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.