வடலூரில் லாரி மோதி 2 என் எல்சி தொழிலாளி பலி, ஒருவர் படுகாயம்
வடலூர், நவ. 27-
வடலூரில் சிமெண்ட் ஏற்றி வந்த லாரி மோட்டார் சைக்கிளில் சென்ற என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேர் மீது மோதியது. இதில் 2 உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வேலு இவருடைய மகன் திருமுருகன் (45) ரோட்டாண்டிக்குப்பம்
கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் மகனசுகுமார் (48)இவர்கள் இருவரும் நெய்வேலி என்.எல்.சி., நிறுவனத்தில் இரண்டாவது சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தனர்.நேற்று காலை திருமுருகன், சுகுமாருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வதற்காக நெய்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது வடலூர் அய்யன் ஏரி அருகே பெண்ணாடத்தில் இருந்து கடலூர் நோக்கி சிமெண்ட் ஏற்றி வந்த லாரி காலை 6. மணியளவில் இவர்கள் மீது மோதியது. இதனை தொடர்ந்து இவர்களுக்கு பின்னால் பணிக்கு செல்வதற்காக ஸ்கூட்டரில் வந்த வடலூர் பார்வதிபுரத்தை சேர்ந்த என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி (பிரகாஷ் மனைவி)சந்திரகலா (38 )மீதும் மோதியது. இதில் திருமுருகன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுகுமார் காயமடைந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். படுகாயம் அடைந்த சந்திரகலா கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். உயிரிழந்த சந்திரகலா, நேற்று தன் தாய்வீடு இருக்கும் ராசாக்குப்பத்தில் இருந்து காலை பணிக்கு ஸ்கூட்டரில் புறப்பட்டு செல்லும்போது சம்பவத்தில் அடிப்பட்டு இறந்துபோனார்,இது குறித்து புகாரின்பேரில்,வடலூர் போலீஸார் வழக்குபதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.