வடலூரில் பரபரப்பு, குழந்தை கடத்தி விற்பனை செய்த 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது.

கடலூர், மாவட்டம்

வடலூரில் குழந்தை கடத்தி  ரூ3.50 லட்சத்திற்கு விற்பனை செய்த 3 பெண்கள் உட்பட4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில்  தொடர்புடைய முக்கிய புள்ளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

வடலூரை சேர்ந்தவர் அருள்முருகன் மனைவி சுடர்விழி 37;. இவர் தனது அக்கா சுதாவின் வீட்டுக்காரர் புதுச்சத்திரம் பெத்தநாயக்கன்குப்பத்தை சேர்ந்த விஸ்வநாதனிடம் தன்னிடம் ஒரு குழந்தை உள்ளதாகவும் அதற்கு 

 பிறப்புச் சான்றிதழ் வேண்டும் எனக் கூறியுள்ளார். விஸ்வநாதன் அந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பெற முயற்சி செய்து கிடைக்காததால்,.

இந்த குழந்தையை வைத்திருந்தால் நீ வழக்கில் சிக்கி விடுவாய் அதனால் குழந்தையை  கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தொட்டில் குழந்தை திட்டத்தில் முடித்து விடலாம் எனக் கூறியுள்ளார். 

பின்னர் விஸ்வநாதன் கடலூர் கலெக்டர் அலுவலகம் சென்று மாவட்ட குறைந்த நல

அலுவலரிடம் குழந்தையை தொட்டில் சேர்ப்பது குறித்து கேட்டுள்ளார். அதற்கு விஸ்வநாதன்  முன்னுக்கு

பின் முரணாக தகவல் தெரிவிக்கவே, 

சந்தேகமடைந்த  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்

அரவிந்த் புதுச்சத்திரம் காவல் நிலையத்திற்கு 

தகவல் தெரிவித்துள்ளார். புதுச்சத்திரம் போலீசார் விஸ்வநாதன் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அவர் தனது மனைவியின் தங்கை வடலூரை சேர்ந்த சுடர்விழியிடம் குழந்தை உள்ளது எனக் கூறியுள்ளார். உடன் சிதம்பரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையில் வடலூர்சென்ற போலீசார் சுடர்விழியிடம் நடத்திய விசாரணையில் அவர்  கடந்த 2022ம் வருடம் டிசம்பர் மாதம் 13ம் தேதி வடலூரில் கோட்டக்கரையைசேர்ந்த சித்த மருத்துவர்

மெகருன்னிசாவிடம்  ரூ 3 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்து இந்த குழந்தையை வாங்கியதாக கூறியுள்ளார் .

உடன் போலீசார்

மெகருன்னிசாவை கைது செய்து விசாரணை நடத்தியதில்

அவர் மீது 2017 ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் இதேபோல் ஒரு குழந்தை கடத்தல் வாழ்க்கு இருப்பதாகவும் ,இதே போல் அவர் கீரப்பாளையம் நரிக்குறவர் காலனி சேர்ந்த ஷீலா, சீர்காழி சட்டநாதபுரம் ஆனந்தன் ஆகியோர் சேர்ந்து இதற்கு முன்பு மூன்று குழந்தைகளை கடத்தி விற்பனை செய்ததாக கூறியுள்ளார். இதனை அடுத்து போலீசார் மெகருன்னிசா 67, சுடர்விழி 37, சீர்காழி சட்டநாதபுரம் ஆனந்தன் 47,

கீரப்பாளையம் கஜேந்திரன்

மனைவி ஷீலா37, ஆகியோர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறனர். மேலும் போலீசார் நடத்தி விசாரணையில் இந்த குழந்தையை

மெகருன்னிசா வடலூர் நரிக்குறவர் காலனி சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் வாங்கியதாகவும், ஆனந்த் கீரப்பாளையம் நரிக்குறவர் காலனி சேர்ந்த ஒரு பெண்ணிடம் வாங்கியதாகவும் தெரியவந்துள்ளது. இக்கூட்டத்தின் பின்புலமாக இருக்கும் முக்கிய புள்ளிகளுக்கு போலிஸ் வலைவீ

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial