முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டம்
10% இட ஒதுக்கீடு விவகாரத்தில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை
ஏழை மக்களின் வறுமையை போக்க மத்திய அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் திமுக அரசு ஆதரிக்கும் – முதல்வர்.
மாத வருமானம் ரூ.60,000 பெறுபவர்கள் ஏழைகளா? – முதலமைச்சர் கேள்வி.
இடஒதுக்கீட்டால் தகுதி, திறமை போய்விட்டது என விமர்சனம் செய்தவர்கள் 10% இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறார்கள்
இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை சேர்க்க கூடாது என ஜவஹர்லால் நேரு காலத்தில் பேசப்பட்டது.
ஏழைகளுக்கான எந்ததிட்டத்தையும் திமுக அரசு தடுக்காது – முதல்வர் மு.க. ஸ்டாலின்
திமுக அரசின் பெரும்பாலான திட்டங்கள் ஏழை மக்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது தான்.
சமூக நீதி கொள்கைக்கு தற்போது மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது
மிக மிக அடிப்படையான கொள்கையை நிலைநாட்ட அனைத்து கட்சி கூட்டம் தற்போது கூட்டப்பட்டுள்ளது
சமூகம், கல்வி ரீதியாக பின்தங்கியவர்களுக்கே இடஒதுக்கீடு என்பது சட்ட வரையறையாக உள்ளது – முதல்வர்.
அரசியலமைப்பு சட்டத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இடஒதுக்கீட்டில், பொருளாதார அளவுகோலை புகுத்த நினைக்கிறது மத்திய அரசு – முதல்வர்