மாவட்டம் தோறும் தருமச்சாலைஅமைத்துநடத்துதுபவர்களுக்கு நிதி உதவி அளிப்பதென, தீர்மானம்
செய்தியாளர்
ஜீவா செந்தில்
வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் ஈரோட்டில் நடந்தது. அதில் தமிழகம், பாண்டி, ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சன்மார்க சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் சங்க உறுதிமொழியை வாசித்து மாநிலத் தலைவராக ஈரோடு,டாக்டர் அருள்நாகலிங்கம் , பொதுச்செயலாளராக ஆத்தார் டாக்டர் வெற்றிவேல், பொருளாளராக தருமபுரி நஞ்சுண்டன் உள்ளிட்ட 37 நிர்வாகிகள் பதவியேற்றுக்கொண்டனர். பிறகு பொதுக்குழுக் கூட்டப் பொருள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1) வள்ளலார் 200ஆவது ஆண்டு வருவிக்கவுற்ற நாளை தனிப்பெருங்கருணை நாளாக அறிவித்து மாவட்டந்தோறும் 52 வாரங்கள் முப்பெரும் விழா, ஆண்டு முழுவதும் தொடர் அன்னதானத் திட்டம் முதலியவை சிறப்பாக நடைபெற்று வருவதற்கும், பல்லுயிர் காப்பகம்,வடலூரில் சர்வதேச மையம் அமையவும் ஆனையிட்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2) வடலூரில் தைப்பூச விழாவில் தலைமைச்சங்கம் பங்கேற்று சிறப்பாக நடத்துவது என்றும்
3) ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டத்தலைவரின் பரிந்துரையின்பேரில் துவங்கப்படும் இரண்டு தருமச்சாலைகளுக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் நிதியுதவி அளிப்பது என்றும்.
4) ஒவ்வொரு மாவட்டத்திலும் நலிவுற்ற சன்மார்க்க சங்கத்தை சீரமைக்கவும், அல்லது மாவட்டத் தலைவரின் பரிந்துறையின் பேரில் துவக்கப்படும், ஞானசபைக்கு ரூ20 ஆயிரம்நிதியுதவி செய்வது என்றும்.
5) சன்மார்க்க சேவையாற்றி ஆதரவற்ற நிலையில் உள்ள சன்மார்க்கிகளுக்கு மாதந்தோறும் ரூ ஆயிரம்உதவி செய்வது என்றும்.
6) சன்மார்க்க சேவையாற்றிவரும் சாதுக்களுக்கு உதவி செய்வது என்றும்.
7) ஓர் ஆண்டுத் திட்டமாக
முதல் மூன்று மாதத்திற்குள் அனைத்து மாவட்டங்களுக்கும் மாவட்டத் தலைவர்கள் மற்றும் தலைமைச் சங்க குழுவினருடன் சென்று உறுப்பினர்களை சேர்த்து உறுப்பினர்கள், சங்கங்கள், நிர்வாகிகள் விவரங்களை சேகரித்து தலைமைக்கு அறிக்கைகளை அளிப்பது என்றும்.
8)தைப்பூசத்தன்று வடலூரில் சுத்தசன்மார்க்க பாடசாலை துவக்கி மாவட்டந்தோறும் குறைந்தது இரண்டு ஆசிரியர்களுக்கு தலைமைச் சங்க ஆய்வு இருக்கை மூலம் பயிற்சியளித்தல். அதற்கு குழுக்களை நியமித்து அவர்கள் மூலம் செயல்படுத்துதல்.
9) சித்த மருத்துவசாலை ஏற்படுத்தி மாவட்டத்திற்கு ஒரு இடத்தில் மாவட்டத்தலைவரின் பொறுப்பில் இலவச சித்த மருத்துவ முகாம் நடத்துவது என்றும் ஆகிய முக்கியதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.