மழையால்,பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தமிழக அரசு ஏமாற்றி துரோகம் செய்து விட்டது விவசாய சங்கத் தலைவர் குற்றச்சாட்டு
தமிழக விவசாயிகள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.சேதுராமன் வெள்ளிக்கிழமை நன்னிலத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது
கடந்த சில நாட்கள் பெய்த பருவம் தவறிய தொடர் கனமழையால் 80 சதவிகிதம் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் உடனடியாக அமைச்சர்களை அனுப்பிப் பார்வையிடச் செய்து நிவாரணம் அளிக்கப்படும் என தெரிவித்தார் அந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூபாய் 20,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது
தமிழக அரசின் வேளாண்மைத் துறை இயக்குனர் அறிவுரையின் பேரில் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அனைத்து வருவாய்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார் அக்கடிதத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் சம்பா தாளடிப் பயிரிடப்பட்ட அளவுஅறுவடைச் செய்யப்பட்ட அளவு மற்றும் பாதிக்கப்பட்ட அளவுகள் குறிப்பிடப்பட்டுள்ளது இந்த அளவீடுகள் எவ்வாறு எடுக்கப்பட்டதென தெரியவில்லை
ஏறத்தாழ 14,000 ஹெக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ள குடவாசல் பகுதியில் 90 ஹெக்டேரும் வலங்கைமான் பகுதியில் 25 ஹெக்டேர் மட்டுமே பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறு அறிவுரை வழங்கப்பட்டுகுறிப்பிட்ட அளவுகளுக்குள் மட்டுமே பாதிப்படைந்த விவசாயிகளைக் கணக்கெடுத்து அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது போல பாதிக்கப்பட்ட விவசாயிகள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது
சம்பாதாளடிச் சாகுபடிச் செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் மத்தியில் தமிழக அரசு தங்களை ஏமாற்றி விட்டதோ என்ற ஒரு எண்ணம் ஏற்பட்டுள்ளது முதலமைச்சர் அறிவித்தபடி நடக்காமல் விவசாயிகளுக்கு ஏதோ துரோகம் செய்து விட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது எனவே அரசு அதிகாரிகள் உண்மையாக நேரடிக் கள ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளும் பயன்பெறுவதை உறுதி செய்திட வேண்டும் தமிழக முதல்வரையே நம்பியுள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகள்ஓரளவாது நிவாரணம் பெற முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார்
பதிலளிமுன்அனுப்பு |