ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள் இனியும் ஏமாறாதீர்கள்
கடலூர் மாவட்டம்
குறிஞ்சிப்பாடி செய்தியாளர்
தே.தனுஷ் –
தே.தனுஷ் –
30.03.24
*ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள் இனியும் ஏமாறாதீர்கள்குள்ளஞ்சாவடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு*
*கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியில் தேர்தல் ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது
இக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலில் கடலூர் வேட்பாளராக போட்டியிடும் திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் அவர்களை அறிமுகம் செய்து வைத்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் சிறப்புரையாற்றினார்
பின்னர் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசுவையில்
ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுகிறவர்கள் ஏமாற்றுவது தொடர் கதையாகி வருகிறது எனவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் ஏமாறாமல்
நமது வெற்றி சின்னமான மாம்பழச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என பேசினார்
மேலும் தொண்டர்கள் மத்தியில் சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை என்ற பாடலை பாடி மேற்கோள் காட்டிய அவர்
சாமானிய மக்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படம் மூலம் பொதுமக்கள் மத்தியில் திரையில் காட்டியது இயக்குனர் தங்கர் பச்சான் அவர்கள் எனவும்
விவசாய குடும்பத்தில் பிறந்த ஆவருக்கு
விவசாயத்தைப் பற்றி நன்கு தெரியும் எனவும் கடலூர் மண்ணின் மைந்தர் எனவும்
கடலூர் மாவட்டத்தில் மிக முக்கியமான ஒன்று முந்திரி உற்பத்தி மற்றும் பலாப்பழ உற்பத்தி இவை அனைத்தையும் அவர் சிறு வயது முதலே விவசாயத்தில் நாட்டம் செலுத்தியவர் என பேசினார்
மேலும் பிரதமர் நரேந்திர மோடி குறித்து பேசுவையில் இந்திய நாட்டின் பெருமையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அனைத்து நாடுகளிலும் கொண்டு சென்று வருகிறார்
நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் முன் உதாரணமாக திகழும் நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக வேண்டும் என தெரிவித்தார்.
கூட்டத்தில் இறுதியில் கடலூர் நாடாளுமன்றத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் இயக்குனர் தங்கர்பச்சான் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி ஆகிய இருவருக்கும் தங்கள் வாக்குகளை செலுத்தி வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி , அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.