போதுமான அடிப்படை வசதியின்றி பராமரிப்பு இல்லாமல் இயங்கும் எஸ் கே வி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
போதுமான அடிப்படை வசதியின்றி பராமரிப்பு இல்லாமல் இயங்கும் எஸ் கே வி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகுப்பறையில் பயமுறுத்தும் விஷ பாம்புகள்.
தண்ணீர் தொட்டியில் சரியான முறையில் தண்ணீர் ஏற்றாததால் கல்லூரி மாணவிகள் சிறுநீர் மற்றும் கழிப்பறை செல்ல முடியாமல் அவதிப்படும் அவல நிலை
இதனால் மன உளைச்சலும் உடல் ரீதியான பிரச்சினைகளும் ஏற்படுவதாக கல்லூரி மாணவிகள் புகார்
சம்பந்தப்பட்ட மாவட்ட பள்ளி கல்வித்துறை உயரதிகாரிகள் கல்லூரியை ஆய்வுகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார்களா??
குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் எஸ் கே வி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர் கல்லூரியில் போதுமான அளவிற்கு அடிப்படை வசதிகள் கல்லூரி மாணவிகளுக்கு மிகக் குறைவாக இருப்பதாகவும் கல்லூரியை சுற்றி புல் பூண்டுகள் அதிகமாக காடு போல் வளர்ந்து இருப்பதால் விஷ ஜந்துக்கள் வகுப்பறைக்குள் சில நேரங்களில் புகுந்து விடுவதாகவும் மேலும் மாணவிகள் உபாதைகளை கழிக்க போதுமான கழிப்பறை வசதிகள் இல்லாமலும் இருக்கும் கழிப்பறைகளில் அதற்கு தேவையான அளவிற்கு தண்ணீர் தொட்டியில் தண்ணீர் சரியான முறையில் ஏற்றுவது இல்லை என்றும் இதனால் மாணவிகளுக்கு ஆரோக்கியப் பிரச்சினைகளும் மன உளைச்சலையும் ஏற்பட்டுவருவதாகவும் மேலும் வகுப்புக்கு சரியான முறையில் பாடம் நடத்த பேராசிரியர்களும் சரியான முறையில் வராததால் கல்வியும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் மாணவிகளும் பெற்றோர்களும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இது சம்பந்தமாக கல்லூரி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதால் சம்பந்தப்பட்ட மாவட்ட பள்ளி கல்லூரி துறை உயரதிகாரிகள் கல்லூரிக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் ஆய்வுகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார்களா??