“நியூஸ் தமிழ்” செய்தியாளர் குழுவை கடத்திச் சென்ற மர்ம கும்பல்: துரிதமாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினர்; விருத்தாசலம் செய்தியாளர்கள் கடும் கண்டனம்.
சென்னை நசரத் பேட்டை அருகே செய்தி சேகரிக்க சென்ற “நியூஸ் தமிழ்” செய்தியாளர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தி அவர்களிடம் இருந்த செல்போன்கள், கேமராக்கள் அடையாள அட்டைகள், ஆகியவற்றை பரித்துக் கொண்டு செய்தியாளர் குழுவை காரில் கடத்திச் சென்றுள்ளது ஒரு கும்பல்.
இந்தச் சம்பவம் தமிழகத்தில் ஒட்டுமொத்த பத்திரிக்கையாளர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
என்ன கேஸ் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் இவர்களை உள்ளே இழுத்து போடுங்கள் என பகிரங்கமாக பேசி கடத்துகிறார்கள்.
எங்கே இருந்து இவர்களுக்கு இதுபோன்ற தைரியம் வருகிறது. இது போன்ற நபர்கள் மீது சட்டத்தின் மூலம் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துரிதமாக இவ்விஷயத்தில் தலையிட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல்துறையினரும் இது சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நமது சங்கத்தின் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
சென்னை நசரத்பேட்டை காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு உடனடியாக கடத்தப்பட்ட செய்தியாளர்கள் குழுவை மீட்டு உள்ளனர்.
இருப்பினும் இந்த சம்பவங்கள் ஜனநாயகத்தின் குரல்வலையை நெரிப்பது போன்றதாகும். இனிமேலும் தமிழ்நாடு அரசு தாமதிக்காமல் பத்திரிகையாளர்களுக்கு உரிய பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் செய்தியாளர் குழுவிடம் இருந்து பறித்த பொருட்கள் எதுவும் இன்னும் மீட்க படவில்லை உடனடியாக காவல்துறையினர் இவ்விஷயத்தில் துரிதமாக செயல்பட்டு பொருட்களை மீட்டு தருமாறும் கேட்டுக் கொள்கிறோம் என தமது கண்டன அறிக்கையில் கூறியுள்ளனர்.