தூத்துக்குடியில் சமத்துவ பொங்கல், பாரம்பரிய விளையாட்டுகளோடு  அமைச்சர் கீதாஜீவன்,  பங்கேற்பு

தமிழக அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு தலைமை அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய அலுவலகம், பேருராட்சி, ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தமிழர் திருநாளான பொங்கல் விழாவினை சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடப்பட வேண்டுமென்று அரசு துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. மாநகராட்சி அலுவலக கட்டிடங்கள் முழுவதும் தோரணங்கள் கட்டப்பட்டு, அலங்கரிக்கப்பட்டிருந்த மின்னொளிகளால் ஜொலித்தன,

இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 4 அடுப்புகளில் பானைகள் வைக்கப்பட்டு சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் உள்ளிட்ட பலவகை பொங்கல் வைத்தும், கரும்பு, மஞ்சள், மற்றும் பல வகையான காய்கனி வகைகள் படையலுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. பொங்கல் பானையில் அரிசியிட்டு சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் துவக்கி வைத்தனர்.பின்னர் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான பானை உடைத்தல், மியூசிக்கல் சேர், பலூன் உடைத்தல், முறுக்கு கடித்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல், வாயில் டியூஸ்பூன் மூலம் எலும்பிச்சை பழம் வைத்து ஒடுதல் சிலம்பாட்டம், வால்சுருள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டெங்குவை ஒழிப்போம், நெகிழி பைகளை தவிர்ப்போம், சுற்றுப்புற பகுதிகளில் அனைவரும் தூய்மையை கடைபிடிப்போம் என்பதை வலியுத்தும் வகையில் பெண்கள் கோலாட்டம் ஆடி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலெட்சுமி, கலைச்செல்வி, மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், சுரேஷ்குமார், சரவணக்குமார், ஜெபஸ்டின் சுதா, ராஜதுரை, பட்சிராஜ், விஜயகுமார், சரண்யா, சோமசுந்தரி, மரியகீதா, நாகேஸ்வரி, கண்ணன், பொன்னப்பன், முத்துவேல், பவானி மார்ஷல், ரெக்ஸின் சூசை, மெட்டில்டா, காந்திமணி, ராஜேந்திரன், ஜாக்குலின்ஜெயா, தனலட்சுமி, தெய்வேந்திரன், சுயம்பு, ரெங்கசாமி, ஜான், ஜாண்;சிராணி, அதிர்ஷ்டமணி, ஜெயசீலி, ரிக்டா, பேபி ஏஞ்சலின், சுப்புலட்சுமி, விஜயலட்சுமி, காங்கிரஸ் கவுன்சிலர்கள் எடின்டா, கற்பக கனி, சந்திரபோஸ், கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் முத்துமாரி, தனலெட்சுமி, உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ்;, திட்டம் ரெங்கநாதன், உதவி ஆணையர்கள் காந்திமதி, சேகர், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாநில பேச்சாளர்கள் சரத் பாலா, இருதயராஜ், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார் மற்றும் கருணா, மணி, அல்பர்ட், பிரபாகர், ஜோஸ்பர் மற்றும் தூய்மை பணியாளர்கள் பல்வேறு துறை சார்ந்த பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், ஆணையரின் கணவர் மற்றும் குழந்தையும் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பின்னர் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தமிழர் திருநாளான பொங்கல் விழாவினை முன்னிட்டு ஒருவருக்கொருவர் தங்களது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழச்சியை பரிமாறிக் கொண்டனர்

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial