தனிக்கழிப்பறை வசதி கட்டி கொடுக்க கோரி குறிஞ்சிப்பாடி பேரூராட்சி செயல் அலுவலரிடம் புளியந்தோப்பு மக்கள் மனு.
தனிக்கழிப்பறை வசதி கட்டி கொடுக்க கோரி குறிஞ்சிப்பாடி பேரூராட்சி செயல் அலுவலரிடம் புளியந்தோப்பு மக்கள் மனு.
குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம் அருகில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் சுமார் 85 வருடங்களாக வசித்து வரும் குடும்பங்களுக்கு கழிப்பறை வசதிகள் இல்லாமல் இருப்பதால் பெரியோர்கள் மற்றும் வயதுக்கு வந்த பெண்கள் முதல் குழந்தைகள் வரை உபாதைகளை கழிக்க ஒரு கிலோமீட்டர் தூரம் சென்று மந்தவெளியில் சென்று வருவது வழக்கம் தற்போது அந்த மந்தைவெளி பகுதியிலும் அரசு கட்டிடங்கள் கட்டுவதற்கு பயன்படுத்தி வருகின்றனர் ஆகையால் காலையில் உபாதைகளை கழிக்க இடமில்லாமல் மிகவும் அல்லல்பட்டு வருவதால் இன்று குறிஞ்சிப்பாடி பேரூராட்சி செயல் அலுவலரை சந்தித்து தமிழக அரசின் தனி கழிப்பறை வசதி திட்டத்தை பயன்படுத்தி கழிப்பறை வசதிகளை செய்து தருமாறு மனு கொடுத்துள்ளனர். இது சம்பந்தமாக பேரூராட்சி செயல் அலுவலர் அப்பகுதி மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு அவர்களிடம் செயல் அலுவலர் கூறுகையில் அரசு தரும் தனிக்கழிப்பறை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றால் உங்கள் பெயரில் சொந்த மனை பட்டா மற்றும் மனை பத்திரம் இருந்தால் தான் நாங்கள் இந்த அரசு திட்டத்தை உங்களுக்கு செய்து கொடுக்க முடியும் என்று பதில் அளித்தார் இதற்கு மக்கள் கூறுகையில் நாங்கள் சுமார் 85 வருடங்களாக பேருந்து நிலையம் அருகில் பேரூராட்சிக்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு இருக்கும் இடத்தை பட்டா கேட்டு பல வருடங்களாக வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர் அனைத்து கட்சியைச் சார்ந்த அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் சாலை மறியல் செய்தும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இது நாள் வரை எங்களுக்கு மாவட்டம் நிர்வாகமும் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர்களும் மனை பட்டா தர முன்வரவில்லை என்றும் செயல் அலுவலரிடம் முறையிட்டனர். ஏன் என்று செயல் அலுவலர் கேட்கையில் இந்த இடம் சுப்பிரமணிய சுவாமி தனியார் கோயிலுக்கு சொந்தமான இடம் என்றும் ஒரு பகுதி தரப்பினர் மத்திய மாநில அரசு தரும் எந்த ஒரு சலுகைகளும் பயன்படுத்த முடியாத அளவிற்கு தனியார் கோயிலின் நிர்வாகிகள் தரப்பினர் தடை செய்து வருகின்றனர். ஆனால் இந்த இடம் நத்தம் புறம்போக்கில் தான் உள்ளது என்றும் நாங்கள் அதற்கான ஆவணங்களை மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கையொப்பமிட்ட நகலையும் பெற்றுள்ளோம் இப்படி எங்களுக்கு ஆவணங்கள் இருந்தும் இதுவரை தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் அனைத்து கட்சி அமைச்சர்களும் மனை பட்டா வழங்க முன்வரவில்லை. என்றனர். ஆகையால் நாங்கள் மூன்று வருடங்களுக்கு முன்பு நீதி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம் எனவும் கூறினார்கள். நீதிமன்றம் எங்கள் வழக்கு மூன்று வருடங்களாக நிலுவையில் உள்ளது. நீதிமன்றமாவது எங்கள் கஷ்டத்தை உணர்ந்து சம்பந்தப்பட்ட வழக்கை விரைவாக விசாரித்து எங்களின் அடிப்படை வசதிகளை செய்து கொள்ளவும் மனை பட்டா பெறுவதற்கும் வாழ்க்கை விசாரித்து நீதி கிடைக்க உதவி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.