ஜிரகபில்வாதி லேகியம்
இது ஒரு ஆயுர்வேத மருந்து வில்வ மரத்தின் வேர் பட்டையிலிருந்து தயாரிக்கப்படுகிறது இது ஒரு இம்காப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு
கோரைக்கிழங்கு சிறு நாகப்பூ லவங்கப்பட்டை கொத்துமல்லி சீரகம் ஏலக்காய் சுக்கு, மிளகு திப்பிலி ஆகிய பொருட்களை முறையாக சுத்தி செய்த பின்
வில்வ மரத்தின் வேர் கசாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து பின்பு மேற்கண்ட பொடிகளை சேர்த்து லேகியம் செய்யப்படுகிறது
இது பித்தம் உடல் சூடு சளி வயிற்று கோளாறு ஆகியவற்றிற்கு சிறந்ததாக பரிந்துரைக்கப்படுகிறது
ஜீரண சக்தி இன்மை பசியின்மை புளித்த ஏப்பம் சாப்பிட்ட பின் அடிக்கடி மலம் கழிக்கும் பிரச்சனை குறைவான ஜீரண சக்தி குமட்டல் நாள்பட்ட வயிற்றுப்போக்கு வாந்தி மேலும் வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் இது பரிந்துரைக்கப்படுகிறது
குடல் இரைப்பை இவைகளை வலுவடைய செய்கிறது அளவு 5 கிராம் தினம் இரண்டு வேளை ஆகாரத்திற்கு பின்
250 கிராம் மருந்தின் விலை ரூபாய் 221
இயற்கையான மருந்துகளை சாப்பிட்டு வளமோடு வாழ வேண்டுகிறேன்