சீர்காழியில் அருள்மிகு சட்டைநாதர் கோவிலுக்கு மே 24 ல் கும்பாபிஷேகம் நடைபெறும் -தருமபுரம் ஆதினம் தகவல்
“தீய எண்ணங்கள் விலகி நல்ல எண்ணங்கள் பெருகட்டும்” ஆதினம்,பொங்கல் வாழ்த்துக்கள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோவிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.மேலும் கோவிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்ற திருஞானசம்பந்தருக்கு இக்கோவில் தனி சன்னதி அமைந்துள்ளது.சிறப்பு வாய்ந்த இக்கோவிலின் 31 ஆண்டுகளுக்கு பின் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று கோவிலுக்கு வந்த தருமபுரம் ஆதீனம் 27 வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது கூறியதாவது சீர்காழியில் அமைந்துள்ள சட்டைநாதர் தேவஸ்தானம் பிரம்மபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் மே மாதம் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 20 ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு 22ஆம் தேதி பரிவார மூர்த்தி களுக்கு கும்பாபிஷேகமும் 24ஆம் தேதி காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் பிரம்மபுரீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தின் போது 18 ஆயிரம் பக்கம் 16 தொகுப்புகளாக திருமுறையும், 14 சாஸ்திரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட உள்ளது. பக்தர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்.