குறிஞ்சிப்பாடியில் ஸ்டுடியோ உரிமையாளரை மர்ம நபர்களால் வெட்டிக்கொலை,மர்ம நபர்களுக்கு போலிஸ் வலை வீச்சு

குறிஞ்சிப்பாடி சாவடி அருகே ஸ்டூடியோ நடத்தி வரும் முருகவேல் மகன் சுந்தரம் என்கிற சுந்தரமூர்த்தி (வயது-40) இவர் வழக்கம் போல் கடையை மூடிவிட்டு சுப்புராயர் நகரில் வசிக்கும் அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது கழுதை வாய்க்கால் ஓடை பாலம் அருகே திங்கள் கிழமை சுமார் இரவு 9 மணி அளவில் மர்ம நபர்கள் பலத்த ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர், இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கிடந்த சுந்தரமூர்த்தியை பொதுமக்கள் பார்த்துவிட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.  தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரத்த வெள்ளத்தி கிடந்த சுந்தரமூர்த்தியை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு பொது மருத்துவமனைக்கு முதல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்கு பாண்டிச்சேரி மகாத்மா காந்தி  மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் பரிசோதித்த பார்த்த போது இவர் வரும் வழியிலேயே இறந்திருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர்  பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக இறந்த சுந்தரமூர்த்தியின் மனைவி சசிக்கலாவதி (வயது-35) அவர்கள்  புகார் கொடுத்ததன் பேரில் குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் செல்வம் அவர்கள் வழக்கு பதிவு செய்து முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து மர்ம நபர்களை தனிப்படை அமைத்து போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial