கல்குணம் கிராமத்தில் புகையான் பூச்சி தாக்கி நெல் பயிர்கள் அழிந்துவரும் அவலம் ,
உறக்கத்தில் இருக்கும் குறிஞ்சிப்பாடி வேளாண்மைத்துறை அதிகாரிகள்
வடலூர், ஜன.2-
குறிஞ்சிப்பாடி அருகில் உள்ள கல்குணம் பூதம்பாடி ஓணாங்குப்பம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் சம்பா நெற்பயிர் பயிரிடப்பட்டு வந்தன கடந்த சில நாட்களுக்கு முன்பு கன மழை பெய்ததால் நீரில் மூழ்கி நெல் பயிர்கள் செத்து மடிந்தன அதற்கு பல ஆயிரங்கள் செலவு செய்து உரங்கள் இட்டு காப்பாற்றி தற்போது ஒரு மாதமே அறுவடைக்கு தயாராக இருக்கும் சம்பா நெல் பயிர்களை புகையான் பூச்சி படையெடுத்து தாக்கி அழித்து வருவதால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். இந்த புகையான் பூச்சிகளை அழிக்க பல கம்பெனிகளின் மருந்துகளை தெளித்தும் பயனில்லை இதை ஏன் குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர் மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை அளிக்க முன்வரவில்லை என தெரியவில்லை. இப்பகுதியில் உள்ள கிராமங்களில் கிணறு வெட்டினால் பூதம் கிளம்புகின்ற கதையாக விவசாயிகளின் நிலைமை மிக மிக மோசமாக இருந்து வருகிறது எனவும் ஒரு பக்கம் கனமழை ஒரு பக்கம் நெய்வேலி என்எல்சியில் வெளியேற்றப்படும் உபரி நீரின் மூலம் வரும் சதுப்பு மண் நிலத்தில் கலந்து விளைச்சலை குறைத்து வருவது ஒரு பக்கம் புகையான் பூச்சி தாக்குதல் ஒருபக்கம் இதுபோன்ற இன்னல்களை சந்தித்து வருவதால் என்னதான் செய்வது என விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். இந்த கிராமங்களின் 5 கிலோமீட்டர் சுற்றளவிலே இருக்கும் குறிஞ்சிப்பாடி வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் உள்ளது அருகில் இருந்தும் ஏன் இது போன்ற அவல நிலை ஏற்படுகிறது என்று தெரியவில்லை இதற்கு சம்பந்தப்பட்ட வேளாண்துறை உயரதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளை காப்பாற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கல் குணம் உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்கள் அடிக்கடி இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டு வருவதால் தனி கவனம் செலுத்தி வேளாண் அதிகாரிகள் அடிக்கடி விவசாய நிலங்களை ஆய்வுகளை மேற்கொண்டு விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.