உலகையே வியக்க வைக்கும் உத்திரமேரூர் கல்வெட்டு:
மன் கி பாத்” நிகழ்ச்சியில் பிரதமர் மோடி. பேச்சு
இந்திய பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று ‘மன் கி பாத் ‘ நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு ரேடியோ மூலம் உரையாற்றி வருகிறார்.
இந்தாண்டின் முதல் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பழங்குடியினர் மற்றும் அந்த சமூகத்துடன் தொடர்புடையவர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது.
நகர வாழ்க்கையுடன் ஒப்பிடுகையில் பழங்குடியின வாழ்க்கை வித்தியாசமானது. அதற்கு என சவால்கள் உள்ளன.
இதனையும் தாண்டி, தங்களது பாரம்பரியத்தை பாதுகாக்க பழங்குடியினர் ஆர்வமாக உள்ளனர்.
இந்தியா முன்மொழிந்ததை தொடர்ந்து, சர்வதேச யோகா தினம் மற்றும் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை கொண்டாட ஐக்கிய நாடுகள் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக நடக்கும் இரண்டு பிரசாரங்களிலும் மக்கள் பங்கேற்பதால், புரட்சி வரும்.
யோகாவையும், உடற்தகுதியையும் தங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மக்கள் ஏற்றுள்ளதால், இந்த பிரசாரத்தில் அதிகளவில் பங்கேற்றுள்ளனர்.
அதேபோல், சிறுதானியங்களையும் அதிக மக்கள் எடுத்து கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஒரு சிறிய கிராமம், அனைவராலும் நன்கு அறியப்பட்ட கிராமம் உத்திரமேரூர்.
இங்கு ஏறக்குறைய நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு உலகையே வியக்க வைக்கிறது.
இந்தக் கல்வெட்டு ஒரு மினி- அரசியலமைப்பு போன்றது. கிராம சபையில் உள்ளதையும், கிராமசபை செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் மற்றும் அதன் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் செயல்முறை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் விரிவாக விளக்குகிறது- என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.