“அர்த்தநாரீஸ்வரர் அவதார சிறப்பு,என்றால் என்ன?ஆன்மிக தகவல்கள் தெரிந்து கொள்வோம்.”
“அர்த்தநாரீஸ்வரர் அவதார சிறப்பு,என்றால் என்ன?ஆன்மிக தகவல்கள் தெரிந்து கொள்வோம்.”
வாருங்கள் அர்த்தநாரீசுவரர்* அவதாரம் பற்றி தெரிந்து கொள்வோம்,
“சிவனின் அவதாரங்களில், அர்த்தநாரீஸ்வரர் அவதாரம் ,தனி சிறப்புடையதாகவும், தனித்தன்மை உடையதாகவும் திகழ்கிறது.
அர்த்தநாரீஸ்வரர் என்பது ஆண்பாதி, பெண்பாதி என உடலில் இரண்டு பாகங்களையும் குறிக்கும் கடவுளாக விளங்குகிறார்.
இதற்கு ஒரு புராண கதை உண்டு,ஒரு சமயம் கயிலை மலை மீது பார்வதி தேவியுடன், சிவபெருமான் அமர்ந்திருந்தார். அப்போது சிவனைக் காண வந்த பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வணங்கி வலம் வந்தார்,
ஆனால் பார்வதி தேவியை வணங்கவில்லை. அதனால் பார்வதி தேவி கோபமடைந்தார். சினம் கொண்ட பார்வதி தேவி பிருங்கியின் உடலில் உள்ள சதை மற்றும் இரத்தம் நீங்குமாறு சாபமளித்தார். பிருங்கி முனிவர் சதையும் இரத்தமும் நீங்கி எலும்பு தோல் போர்த்திய உடம்பினைப் பெற்றார்.
சிவன் தம்முடைய தளர்வடைந்த நிலையினைக் கண்டு இரக்கமுற்றார். சிவன் பிருங்கி முனிவருக்கு மூன்றாவது காலாக ஊன்று கோலினை அளித்தார். அதனைப் பெற்ற முனிவர் மகிழ்ச்சி அடைந்து சிவனின் முன்பாக நடனம் ஆடி பக்தியைச் செலுத்தினார். இதனைக் கண்ட பார்வதி தேவி மனம் வருந்தி சிவனில் பாதி உருவை அடையவேண்டும் என்று கருதி சிவனை நோக்கி கடுமையான தவத்தினை மேற்கொண்டார்.
சிவன் மனமகிழ்ந்து தம்முடலில் பாதியினைத் தருவதாக வரமளித்தார். பார்வதி தேவி சிவனுடன் ஒன்றிணைந்து அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி அளித்தார். பிருங்கி முனிவர் இருவரையும் வணங்க வேண்டிய நிலை ஏற்பட்டு வணங்கினார்.
இந்த நாளை நினைவூட்டுவதாகத்தான் தீபவிழா கொண்டாடப்படுகிறது என்று சில புராண நூல்கள் கூறுகின்றன.
“மற்றொரு குறிப்பில்”
சிவபுராணம் அர்த்தநாரீஸ்வரரைப் பற்றிக் கூறினார், பிரம்மன் இப்பிரபஞ்சத்தைப் படைக்கையில் உயிரினங்களையும், விலங்கினங்களையும் படைத்தார்,
அவை அனைத்தும் ஆண் உயிரினங்களாகவே தோன்றின. அதனால் பிரபஞ்ச உற்பத்தியானது தடை செய்யப்பட்டது. சிவன் தனித்திருப்பதனால் உயிர் உற்பத்தி இல்லை என்பதனைப் பிரம்மன் உணர்ந்தார். பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்க சிவனுடலில் பாதியைச் சக்திக்கு அளித்து ஒன்றிணைந்த உருவத்தின் தேவையை அறிந்து பாதி ஆணாகவும் (சிவன்) பாதி பெண்ணாகவும் (பார்வதி தேவி)
படைத்து பிரபஞ்சத்தின் உயிர் உற்பத்தியினைச் செவ்வனே நடைபெறச் செய்தனர்.
உண்ணாமுலையம்மனுக்கு தனது உடலில் இடதுபாகத்தை தந்து ஆணும்–பெண்ணும் சரிசமம் என்பதை உலகுக்கு உணர்த்தவே அண்ணாமலையார் அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
இந்த உருவமானது நமது நடைமுறை வாழ்க்கையில் ஆண் இன்றி பெண் இல்லை பெண் இன்றி ஆண் இல்லை என்று உன்னதமான பொருளை உணர்த்துகிறது.
அர்த்தநாரீஸ்வரர் என்றால் என்ன?அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயரில், அர்த்தம் என்றால் பாதி என்று பொருள்;நாரி,என்றால்,பெண்,என்று பொருள்.
சிவன் பாதி, பார்வதி பாதி என்று ஆணுருவம், பெண்ணுருவம் இணைந்து இருப்பதால் தான் அர்த்தநாரி + ஈஸ்வரர்(சிவன்) என்பது அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயர் கொண்டது.
அர்த்தநாரீஸ்வரர் எனும் பெயர் மட்டுமின்றி வேறு சில பெயர்களும் உள்ளன;
1) உமையொரு பங்கன்2) மங்கையொரு பாகன்3) மாதொரு பாகன்,
என இந்த மூன்று பெயர்களாலும் கூட அர்த்தநாரீஸ்வரர் அழைக்கப்படுகிறார்.
சிவனின்றி சக்தியில்லை, சக்தியின்றி சிவனில்லை என்று விளக்கும் உருவமாக திகழ்கிறது இந்த அர்த்தநாரீஸ்வரர் உருவம். வாழ்வியலில், ஆணின்றி பெண்ணும், பெண்ணின்றி ஆணும் சாத்தியமில்லை என்ற பொருளையும் தருகிறது அர்த்தநாரீஸ்வரர் உருவம்.
காஞ்சி கைலாசநாதர் கோயிலில் இருக்கும் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் தான் தென்னிந்தியாவிலேயே காணப்படும் பழைய வடிவங்களில் ஒன்று எனக் கூறப்படுகிறது. இங்கு பார்வதி வீணையுடனும், சிவன் காளையில் ஏறி அமர்ந்திருக்கும் கோலத்தில் காணப்படுகின்றனர்.
திருச்செங்கோடு சிவன் கோயிலில் மூலவராக அமைந்திருக்கிறார் அர்த்தநாரீஸ்வரர். இங்கு உமாதேவியாருக்கு அர்த்தநாரீஸ்வரி, பாகம்பிரியாள் என்ற பெயர்களும் உள்ளன. இங்கு அர்த்தநாரீஸ்வரர் மாதொருபாகன் என்றும் அழைக்கப்படுகிறார்…