“அமாவாசை திதியில் செய்ய வேண்டிய அற்புத பலனளிக்கும் பரிகாரங்கள்”
அமாவாசை திதி:
புதுநிலவு, மறைமதி அல்லது
அமாவாசை என்பது
நிலவின் முதல் கலை ஆகும்.
வானியல்படி சந்திரனும்
சூரினுனும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நாளே அமாவாசை
ஆகும்.
இந்நாளில் சூரிய ஒளியானது புவியில் இருந்து காண இயலாத நிலவின் பிற்பக்கத்தில் முழுமையாகப் பதிகிறது.
எனவே இந்நாளில் புவியை நோக்கி இருக்கும் நிலவின் முற்பக்கம் ஒளியின்றி இருக்கும்.
நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதையானது
சுமார் ஐந்து பாகைகள்
அளவுக்கு சாய்வாக இருக்கிறது.
எனவே புதுநிலவு நாட்களில் சூரிய வெளிச்சத்தால்
ஏற்படும் நிலவின்
நிழல் பெரும்பாலும் புவியின் மீது விழுவதில்லை.
அவ்வாறு விழும்போது சூரிய மறைப்பு நிகழும்.
புதுநிலவு ஒரு இருள் நிறைந்த வட்டம் போன்று இருக்கும்.
இது எப்போதும் கதிரவனுடன் ஒரே நேரத்தில் எழுந்து மறைந்து விடுவதால் இதைக் காண இயலாமல் போகிறது.
எனினும் முழுக் கதிரவ மறைப்பு நிகழ்வின் உச்ச நிலையின் போது மட்டும் புதுநிலவை வெறும் கண்களால் காண இயலும்.
சந்திரமானம் எனப்படும் நிலவை அடிப்படையாகக் கொண்ட சில காலக்கணிப்பு முறைகளில் புதுநிலவு நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படுகிறது.
இந்து சமயத்தில் திதிகள்
எனப்படும் சந்திர நாட்களுள் அமாவாசையும் ஒன்று.
அமாவாஸ்யை என்ற சொல் அமாவஸ்யா
என்ற வடமொழிச்
சொல்லின் நேர் திரிபு.
சூரியனும், சந்திரனும்
கூடி நிற்குந் திதி அமாவாஸ்யை.
தேய்பிறை நாட்களில் அமாவாஸ்யை.
கடைசி நாள்
மாதுர்காரனாகிய சந்திரனும் பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை எனப்படும்.
சந்திரன் என்றால் தாய் மற்றும் தாய்வழி உறவினர்கள்.
சூரியன் என்றால்
தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்கள்
இவர்கள் இருவரும் இணையும் அமாவாசை தினத்தில் மறைந்த நமது முன்னோர்கள் அவர்களது சந்ததியினர் வாழ்வில் முன்னேற தடைகள் அகல, பலவித தோஷசங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு அவர்கள்அந்த தினத்தில் எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவார்கள்
என்பது ஐதீகம்.
அதனால் தான் அமாவாசையன்று
காகம், ஈ, எறும்பு,
நாய், பசு போன்ற ஜீவராசிகளுக்கு
உணவிட வேண்டும்
என்று நம்
முன்னோர்கள் சம்பிரதாயத்தை வகுத்துள்ளனர்.
நம்வீட்டில் எந்த
நல்லது, கெட்டது நடந்தாலும் முதலில் அறிவது(தெரிவது) இவர்களுக்கு தான்
நம்வீட்டிற்க்கு உறவினர் வர போகிறார்கள் என்றால் நம் வீட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் காகம் கத்தும்.
மற்றோரு உறவினர் ஒரு கெட்ட செய்தியை சொல்லவருகிறார் என்றால் வேறு இடத்தில் இருந்து காகம் கரையும்
இதை நீங்கள் கவனித்து பார்த்தால் தெரியும் நல்ல விசயத்தை ஒரு இடத்திலும், கெட்ட செய்தியை வேறு இடத்திலும் இருந்து காகவடிவில் நமக்கு தெரிவிப்பது நமது முன்னோர்களே!
நமது வீட்டில் ஒரு ஜீவன் பிரிய போகிறது என்றால் நம் வீட்டில் உள்ள மாடு, நாய்களுக்கு தான் முதலில் தெரியும்.
இந்த உலகில் இருந்து பிரிந்த ஒவ்வொரு ஆத்மாவும் வலிமை உள்ளவையே.
அதுவே உங்கள் தாத்தா, பாட்டி, முன்னோர்கள் என்றால் அவர்களை நீங்கள் முறையாக வழிபாடு செய்தால் அவர்களின் அத்தனை சக்தியும் உங்கள் முன்னேற்றத்திற்கு கிடைக்க அவர்கள் முழு ஆசீர்வாதம் செய்வார்கள்.
உங்கள் ஒவ்வொரு அசைவையும் அவர்கள் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தாலும் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்ந்து இந்துக்களால்
நம்பப்பட்டு வரும்
ஐதீகம்.
நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது.
அவர்களை நமது சாதாரணக் கண் கொண்டு அடையாளம் தெரிந்து கொள்ள இயலாது.
மேலும் ஒவ்வொருவரையும் தனித்தனியாக
வணங்கிட இயலாது.
இதனால் தான் அவர்களுக்கு ஹோமம் வளர்த்து யாகம் அனுசரித்து பஞ்ச பூதங்களையும் முன்நிறுத்தி உரிய மந்திரங்களோடு வணங்குகிறோம்.
இதுவே பித்ரு ஹோமம் எனப்படுகிறது.
சிருஷ்டியின் போது இறைவன் ஜீவன்களது ஜீவசக்தி நிறைந்த கும்பத்தை வைத்து சிருஷ்டியை தொடங்குவது போன்று பித்ருக்களின் ஜீவசக்தி அமுதகலசமாக தோன்றும் இடமே சோமாதித்ய மண்டலமாகக் கருதப்படுகிறது.
அம்மாவாசையன்று சர்வகோடி லோகங்களிலுள்ள மகரிஷிகள் உள்பட அனைத்து தேவதைகளும் ஜீவன்களும் பூலோகத்திற்கு வந்து புண்ணிய நதிக் கரைகளிலும், கடலோரங்களிலும்
காசி ராமேஸ்வரம், கயை போன்ற புண்ணிய தலங்களிலும் தர்ப்பண பூஜையை மேற்கொள்கின்றனர் என்பது சாஸ்திரங்கள் நமக்கு உரைத்திடும் உண்மைகள்.
நமது மூதாதையர்களுக்கே உரித்தான இந்தத் தர்ப்பண பூஜையானது பித்ருக்களுக்கு மட்டுமின்றி, வம்சா வழியிலுள்ள நமக்கும் தான் பெரிதும் பயன் தருவதாய் உள்ளது.
இதனாலேயே அமாவாசையில் கொடுக்கப்படும் பெற்றோருக்கான அல்லது முன்னோருக்கான
திதி வழிபாடு மிகவும் சிறப்புடையதாய் விளங்குகிறது.
பொதுவாக வலது ஆள் காட்டி (குருவிரல்) விரலுக்கும், கட்டை விரலுக்கும் (சுக்கிரவிரல்) இடையிலுள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக தர்ப்பணங்கள் அளிக்கப்படுகின்றன.
இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி மேல்நோக்கி எழும்பிச் சென்று, எத்தனையோ கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடைகின்றது.
சாதாரணமாக, அமாவாசையன்று கீழிருந்து மேல் செல்வதே பித்ரு லோக அந்தர ஆக்ரஷன சக்தியின் தெய்வீகக் தன்மையாகும்.
தை அமாவாசையன்று இச்சக்தியானது மிகவும் அபரிதமான தாகப் பெருகுகின்றது.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யும் போது பசு தயிர் கொண்டு தர்ப்பணம் செய்வது திருப்தியளிப்பதாய் கருதப்படுகிறது.
பித்ரு லோகத்திலுள்ள மூலிகையாய் விளங்குவது புடலங்காயே,
இதன் நிழலில் தான் பித்ரு- தேவர்கள் இளைப்பாறுவதாய் ஐதீகம்.
ஆக, அதி அற்புதமான தெய்வீக ஆற்றல்களைக் கொண்ட நமது பித்ருக்களுக்குத் தர்ப்பணங்கள், திவசங்கள், படையல்களை
முறையாக அளித்து பல்லாயிரக்கணக்கான நம் கர்மவினைகளுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.
தெரிந்துகொள்வோம்.
சிரார்த்தம்(திவசம்) என்றால்.
காலம் சென்ற நம் முன்னோர்களின்
நினைவு நாளன்று அவர்களுக்கு பிரியமான உணவு, உடைகளைப் படைத்து வணங்கிப் பின்னர் அதனை ஏழைகளுக்கு தானமாக வழங்குதல் திதி அல்லது சிரார்த்தம் எனப்படும்
தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு வலது ஆள் காட்டி (குருவிரல்)
விரலுக்கும், கட்டை விரலுக்கும் (சுக்கிரவிரல்) இடையிலுள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக நீரை வார்த்து செய்வது தர்ப்பணம் எனப்படுகிறது
தர்ப்பணம் செய்ய அந்த வேத மந்திரங்கள் தெரிந்த வேதியர் தான் வேண்டும் என்பதில்லை
செய்பவர்களுக்கு அந்த மந்திரங்கள் மற்றும் வழிமுறைகள் தெரிந்திருந்தால் போதும்.
சிரார்த்தம் செய்விக்க உபாத்தியார் ஒருவரும் அன்னமிட தகுந்த நபர்களும் தேவை.
சிரார்த்தத்தில் குறிப்பிடத் காய்கறிகள் மட்டுமே சேர்க்கவேண்டும்.
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், அமாவாசை தினமே மிகச் சிறந்தது.
மாதம் தோறும் அமாவாசையன்று தர்ப்பணம் தர முடியாதோர், ஆண்டுக்கு ஒரு முறை வரும் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து மாதத்திலும் தர்ப்பணம் தந்த பலனை பெறலாம்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பி இருவரும் தனித் தனியே சிரார்த்தம் தரவேண்டுமா என்பது குறித்து பலருக்கு சந்தேகம் உள்ளது.
அண்ணன்-தம்பி தனித்தனியே சிரார்த்தம் செய்யவேண்டுமா?
மறைந்த பெற்றோருக்கு சாப்பாடு போட்டு மகிழ்வித்து அவர்களது ஆசியைப் பெறும் விதமாகச் செய்யப்படும் சிரார்த்தம் தர்ப்பணம் போன்ற பித்ரு கர்மாக்களை ஒரே குடும்பத்து வாரிசுகள் ஒன்றாக செய்ய வேண்டுமா அல்லது தனித் தனியாக செய்ய வேண்டுமா என்ற குழப்பம் பலரிடம் உள்ளது.
இறந்தவருக்கு சிரார்த்தம் தர்ப்பணம் போன்றவற்றை செய்பவர்களுக்கு
நீண்ட ஆயுள், ஆரோக்கியம், கடன்நிவர்த்தி, வம்ச விருத்தி, முதலான பலன்கள் கிடைக்கும்.
பித்ருக்களுக்கான கர்மாக்களை யார் முறையாகச் செய்யவில்லையோ அவர்களுக்கு குடும்பத்தில் குழப்பம், சண்டை, வியாதி, வம்ச விருத்தி இன்மை போன்ற சில துன்பங்கள் நேரிடலாம்.
ஆகவே சகோதர்களுக்குள் யாரோ ஒருவர் செய்து விட்டாரே நாம் ஏன் சிரார்த்தம், தர்ப்பணம் மறுபடியும் செய்ய வேண்டும் என்று தவறாக எண்ணி ஒருவர் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய சிரார்த்தம், தர்ப்பணம் போன்றவற்றைச் செய்யாமல் இருந்து விட்டால், நஷ்டம் அவருக்குத்தானே தவிர, பித்ருக்களுக்கு இல்லை.
அதாவது சிரார்த்தம் தர்ப்பணம் முதலான பித்ரு கர்மாக்களைச் செய்யாதவனுக்கு பித்ரு தோஷம் ஏற்படலாம். ஒரு வேளை அதிகமான புண்ணிய பலத்தால் பித்ரு தோஷத்தை ஒருவன் தன் வாழ்நாளில் அனுபவிக்காமல் போனாலும் அந்த பித்ரு தோஷத்தை அவனது வம்சத்தினர் அனுபவிக்க நேரலாம்.ஆகவே அவரவர்களின் அப்பா, தாத்தா செய்து வந்த வழிமுறையை ஒட்டி பித்ருக்களுக்கான சிரார்த்தம் தர்ப்பணம் முதலானவற்றை அந்தந்த காலங்களில் தவறாது செய்து விட வேண்டும்.
நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும் தன்னை நம்பி வாழும் தனது குடும்பத்தினரின் நன்மையைக் கருதி கட்டாயம் பித்ரு கர்மாக்களை செய்வது நல்லது.அவர்களுக்கு நாம் எந்த ஒரு சொத்தும் பணமும் சேர்த்து வைக்காவிட்டாலும், பித்ரு கர்மாக்கள் செய்யாததால் ஏற்படும் பித்ரு தோஷத்தை சொத்தாக வைத்து விட்டுச் செல்லக்கூடாது. ஆகவே அண்ணன், தம்பிகள் பலர் இருந்தால் அனைவரும் தனித்தனியே அவரவர்களுக்குரிய கடமைகளை அதாவது சிரார்த்தம் தர்ப்பணம் போன்ற பித்ரு கர்மாக்களை தனித்தனியே கட்டாயம் செய்ய வேண்டும். அல்லது அண்ணனோ, தம்பியோ பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யும் போது அவர்களுடன் சேர்ந்து நின்றாவது பித்ரு கர்மாக்களைச் செய்யவேண்டும்.
முன்னோர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்யாமல் நீங்கள் எத்தனை பூஜை செய்தாலும் நீங்கள் செய்யும் தொழில் குடும்பம் முன்னேற்றமே ஆகாது.
ஒருவரது வாழ்வில் குலதெய்வ வழிபாடும், முன்னோர்கள் வழிபாடும் மிக மிக முக்கியமான ஒன்று ஆகும்.
அமாவாசை அதிதேவதை மற்றும் வழிபாடு: சிவன் மற்றும் காளி,
பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, தானம் காரியங்களை செய்தல்.
வணங்க வேண்டிய தெய்வங்கள் : குலதெய்வம்
அமாவாசைக்கான கிரகம் சனி ஆகும்.
அமாவிசையன்று
விரதம் இருந்து நம்
இஷ்ட தெய்வத்தை வழிபடுவதால் நாம் விரும்பிய அனைத்தையும் நாம் பெறமுடியும்.
முதலில் அமாவாசை தினத்தில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விடவேண்டும்.
பின்பு வீட்டிலுள்ள எதிர்மறை சக்திகள்
விலக உப்பு கலந்த
நீரால் வீடு முழுவதையும் கழுவி தூய்மைப்படுத்த வேண்டும்.
பின்பு வீட்டிலுள்ள பூஜையறையில் காலையிலும், மாலையிலும் விநாயகர் படத்திற்கு முன்பு தீபம் ஏற்ற வேண்டும்.
அமாவாசை தினத்தில் புலால் உணவுகள், பூண்டு, வெங்காயம் சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்த்து சாத்விக உணவுகளை உண்ண வேண்டும்.
முடிந்தால் அன்றைய தினம் முழுவதும் பால் பழங்களை உண்ணலாம் அதோடு உங்களுக்கு விருப்பமான கோவிலுக்கு சென்று வழிபட்டு வரலாம்.
மந்திர தீட்சை பெற்றவர்கள்
அல்லது தங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு தங்களின் விருப்பங்கள் நிறைவேற விரும்புபவர்கள், அமாவாசை நாள் முழுவதும் உணவேதும் உண்ணாமல் விரதம் இருந்து, தங்களின் இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரங்களை ஜெபித்து வழிபடுவதால், எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்,
வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் பெருகும்.
பொன் பொருள்
சேர்க்கை உண்டாகும்.
அமாவாசை தினத்தில் மன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, படையலிட்டு வழிபடுவது போன்ற செயல்கள் மூலம் பித்ரு சாபம் நீங்கும்.
அதோடு முன்னோர்களின் பரிபூரண ஆசியும் நமக்கு கிடைக்கும்.
அமாவாசை தினத்தில் குலதெய்வத்திற்கு பூஜை செய்து படையலிட்டு வழிபட்டு வந்தால் குலதெய்வ சாபம் நீங்கும்.
திதி நித்யா தேவதையை முறையாக வணங்கினால் தொட்டதெல்லாம் துலங்கும்.
திதி நித்யா தேவதை படத்தை வைத்து அதற்குரிய மந்திரங்களை உச்சரித்து வந்தால் உங்களின் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக, நிம்மதியாக வாழ முடியும்.
அமாவாசை திதியில் வழிபட வேண்டிய
நித்யா தேவதை
காமேஸ்வரி
‘காம’ எனில், விரும்பிய ரூபத்தை எடுக்கக் கூடியவள் என்று பொருள்.
இவள் கோடி சூர்ய பிரகாசமாக ஜொலிக்கும் தேக காந்தி உடையவள்.
மாணிக்க மகுடம் தரித்து, பொன்னாலான மரகத மாலை, ஒட்டியாணம் போன்ற விலை மதிப்பில்லா அணிகலன்களை அணிந்துள்ளாள். முக்கண்கள்,
ஆறு திருக்கரங்கள் கொண்டவள். தன் திருக்கரங்களில் கரும்பு வில், மலரம்புகள், பாசக்கயிறு, அங்குசம், அமிர்த பாத்திரம் மற்றும் வரத முத்திரை தரித்து உள்ளாள்.
பிறை சூடிய
திருமுடியைக் கொண்ட இந்த அம்பிகையின் புன்சிரிப்பும், கருணை பொழிந்திடும் கண்களும், கேட்கும் வரங்களை வாரி வழங்கவல்லவை.
காமேஸ்வரி மந்திரம்:
ஓம் காமேஸ்வர்யை வித்மஹே நித்யக்லின்னாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.
வழிபடு பலன்கள்:
குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும்.