கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் மீன்வளத்துறை வாயிலாக மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு
கடலூர்மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் இன்று
(18.11.2022)
குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ள அகரம் அரசு மீன்குஞ்சு வளர்ப்பு
பண்ணைக்கு சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் கெண்டையின மீன்குஞ்சு
வளர்ப்பு பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது வேளாண்மை பொறியியில்
துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டைகளில் மீன்வளர்ப்பிற்கு
தகுதியான பண்ணைக்குட்டைகளை கண்டறிந்து அனைத்து பண்ணைக்
குட்டைகளிலும் மீன்குஞ்சுகளை இருப்பு செய்து உள்நாட்டு மீன் உற்பத்தி மற்றும்
மீன்வளர்ப்பு விவசாயிகளின் பொருளாதாரத்தினை மேம்படுத்திட உரிய நடவடிக்கை
எடுக்கும்படி தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள்
உடன் இருந்தனர்,