மணல் கொள்ளையின் தலைநகரமே வேலூர் மாவட்டம் தான்; அண்ணாமலை காட்டம்!
தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் நடைபயணம் மேற்கொண்டபோது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மணல் கொள்ளையின் தலைநகரமே வேலூர் மாவட்டம் தான். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என்ற பெயரை நான் பயன்படுத்தவில்லை. யார் வேண்டுமானாலும் வரலாம். சேர்ந்தும் வரலாம். தனித்தனியாகவும் வரலாம். நாளைக்கே வரலாம். அடுத்த வாரம்கூட வரலாம். கதிர் ஆனந்த் வீட்டு கதவை அமலாக்கத்துறை விரைவில் தட்டும் என்று நான் சொல்லவில்லை. யாரெல்லாம் மணல் கொள்ளையில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் வீட்டு கதவை தட்டதான் போகிறது. அமலாக்கத்துறை மூலம் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை மிரட்டியது மட்டுமின்றி முதல்-அமைச்சர் வரைக்கும் கைது பண்ணியிருக்கிறார்கள் என்று தி.மு.க. எம்.பி. அ.ராசா சொல்லி இருக்கிறார். ஹேமந்த் சோரனை பொறுத்தவரை அவருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசினுடைய துறை நடவடிக்கை எடுத்தாலும், அதில் நியாயம் இருப்பதால்தான் போலீஸ் 5 நாட்கள் போலீஸ் விசாரணைக்கு அநுமதி கொடுத்திருக்கிறார்கள். அமைச்சர் துரைமுருகன் அமலாக்கத்துறை வந்தாலும் நாங்கள் தயங்கமாட்டோம். அவர்களுக்காக எங்கள் கதவை எப்பவுமே திறந்துதான் வைத்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். உப்பு சாப்பிட்டவர்கள் தண்ணீர் குடிச்சுதான் ஆகணும். சீமான் கட்சியினர் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது. அவருடைய கட்சி மிக வேகமாக கலைந்து கொண்டிருக்கிறது. அதனால் அண்ணாமலைைய வம்புக்கு இழுத்தால் ஒரு இமேஜ் கிடைக்கும் என்று நினைக்கிறார். சீமான் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். அண்ணாமலை என்ன பொருளாதார நிபுணரான்னு துரைமுருகன் கேட்டிருக்கிறார். ஆமாம், நான் எம்.பி.ஏ. பைனான்ஸ் முடிச்சிருக்கேன். லக்னோவில் ஐ.ஐ.எம். படித்திருக்கிறேன். 10 லட்சம் பேர் எழுதிய கேட் எனப்படும் தேர்வில் 99.4 சதவீதம் பெற்று வெற்றி பெற்றுள்ளேன். அதனால் துரைமுருகனுக்கு தெரிந்ததை விட எனக்கு அதிகமாகவே பொருளாதாரம் தெரியும். இந்த மாநிலம் எதை நோக்கி செல்கிறது என்று எனக்கு தெரியும். தி.மு.க. வினரும், அ.தி.மு.க.வினரும் சைக்கிளை ஸ்டேண்ட் போட்டு விட்டு ஓட்டுகிறார்கள். பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் சைக்கிள் ஸ்டேண்டை தள்ளிவிட்டு ஆட்சி நடத்துவோம் என்றார்.