வடலூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
வடலூர் மார்ச்-08 குறிஞ்சிப்பாடி செய்தியாளர் D. தனுஷ்
கடலூர் மாவட்டம் வடலூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சர்வதேச பெண்கள் தின விழாவை முன்னிட்டு சமம் முல்லை மகளிர் குழுவினர் சார்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது விழிப்புணர்வு பேரணியை பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் MS அனிஷா ராணி அவர்கள் தலைமையேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார் வடலூர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேரணி வடலூரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பின்னர் வடலூரில் உள்ள அறிவியல் இயக்க அலுவலகத்தில் நிறைவுபெற்றது
பேரணியில் 150 க்கு மேற்பட்ட மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்தும் பெண்கள் பாதுகாப்பது குறித்தும் பெண் சிசு கொலைகளை தடுப்பது குறித்தும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல்களிருந்து தற்காத்துக் கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோஷங்களை எழுப்பினர்
பின்னர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் புதிய அலுவலக திறப்பு விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது அறிவியல் இயக்க அலுவலகத்தை சென்னை லயோலா கல்லூரி பேராசிரியர் முனைவர்
இரா.காளீஸ்வரன் அவர்கள் திறந்து வைத்தார்
நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர்
எஸ். பாலகுருநாதன் அவர்கள் தலைமை வகித்தார் சிறப்பான வரவேற்புரையை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஸ்வீட் டிரஸ்ட் தலைவர் ஏ.சி. டி தனகேசவமூர்த்தி அவர்கள் வழங்கினார்
துணைத் தலைவர்கள் ராமமூர்த்தி, பாலு, பிரசன்ன குமார் மற்றும் துணைச் செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் மறைந்த கே.பி நாராயணன் அவர்களின் திருஉருவப்படத்தை மாவட்டச் செயலாளர் R. தாமோதரன் மற்றும் எம்.எஸ் ஸ்டீபனநாதன் அவர்கள் திறந்து வைத்தனர்
நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்
வள்ளலார் வர்த்தக சங்கம் ஞானசேகரன் லயன்ஸ் கிளப் சங்கீதா மற்றும் வடலூர் சியோன் மேல்நிலைப்பள்ளி நிறுவனர் பிரவீன் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.