வடலூர் அரிமா சங்கம் மற்றும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய இலவச இருதய சிகிச்சைக்கான மருத்துவ முகாம் வடலூர் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் வடலூர் சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சீயோன் பள்ளியில் மாபெரும் இலவச இருதய சிகிச்சை முகாம் நடைபெற்றது. வடலூர் அரிமா சங்க தலைவர் கண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முகாமில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பொதுமக்களுக்கு இருதைய நோய்களை கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது, மேலும் இசிஜி ,எக்கோ, சர்க்கரை நோய் கண்டறிதல், ரத்த கொதிப்பு ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மேல் சிகிச்சை தேவை இருப்பின் அவர்கள் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மூலம் இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட அரிமா சங்கத் தலைவர் ராஜா மாரியப்பன் வடலூர் அரிமா சங்க செயலாளர் ராஜ்குமார் பொருளாளர் சின்னப்பராஜ் மாவட்ட தலைவர் சந்திரகாசு ராஜேந்திரன் பிரம்ம நாயகம் கலைச்செல்வன் ஞானசேகரன் முருகன் ராஜமாரியம்மன் வட்டாரத் தலைவர் ராமதாஸ் சீயோன் பள்ளியின் உரிமையாளர் பிரவீன் சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.