உத்தரபிரதேசத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், தீயணைப்பு படையினர் உள்பட 9 ஆயிரத்து 55 பேருக்கு பணி நியமன ஆணை
உத்தரபிரதேசத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், தீயணைப்பு படையினர் உள்பட 9 ஆயிரத்து 55 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பணி நியமன ஆணை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் உரை ஒளிபரப்பப்பட்டது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பிரதமர் மோடியின் உரை காணொளி காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது.
அதில் பிரதமர் மோடி கூறுகையில், ஒருகாலத்தில் மோசமான சட்டம்-ஒழுங்கு சூழ்நிலை, மாபியாவுக்கு பெயர்போனது உத்தரபிரதேசம். இன்று உத்தரபிரதேசம் சிறப்பான சட்டம்-ஒழுங்கு மற்றும் வேகமாக வளர்ந்து வரும் மாநிலமாக உள்ளது’ என்றார்.