உடையார்பாளையம் அருகே குடும்பத் தகராறு ஒருவர் சாவு
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வடகடல் காலனி தெருவை சேர்ந்த ஷ சாமிநாதன் மகன் சிற்றரசன்(45).இவரது மனைவி செல்வராணி . இவர்களுக்கு திருமணம் நடந்து 2 மகன்கள் 1 மகள் உள்ளனர். இந்நிலையில் 19-05-23ம் தேதி புதுப்பாளையம் கிராமத்திற்கு துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சிற்றரசன் சென்றுள்ளார். அங்கு சிற்றரசனுக்கும் செல்வராணிக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சிற்றரசன் மட்டும் வடகடல் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வந்து, அங்கிருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி உள்ளார். இதையடுத்து சிற்றரசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்னர் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிற்றரசன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் சிற்றரசன் தந்தை சாமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் எஸ் ஐ திருவேங்கடம் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.