பொட்டக்கொல்லை ஊராட்சியில் சிலம்பக்கலை அரங்கேற்ற விழா.
பொட்டக்கொல்லை ஊராட்சியில் சிலம்பக்கலை அரங்கேற்ற விழா.
அரியலூர் ஜூன்-26;
அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் அடுத்து தத்தனூர்-பொட்டக்கொல்லை ஊராட்சியில் சோழலிங்கா சிட்டு சிலம்பக்கலை அரங்கேற்ற விழா ஜெயங்கொண்டம் சார்பு நீதிமன்ற நீதி அரசர் திருமதி ஆர் லதா தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்ற நீதி அரசர் இரா ராஜசேகரன் மற்றும் ஜெயங்கொண்டம் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதி அரசர் எஸ் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவின் தொடக்கமாக மூத்த பத்திரிகையாளர் மதுக்குமார் வரவேற்புரையும், இறுதி நிறைவாக பயிற்சி ஆசிரியர் அன்புச்செல்வன் நன்றியுரையும் வழங்கினர்.
இவ்விழாவில் மாணவ மாணவிகள் தற்காப்பு கலைகளை சிறப்பாக செய்து காண்பித்து சான்றிதழ்களை தலைமை மற்றும் முன்னிலையாளர்கள் கரங்களால் பெற்றுக்கொண்டனர். இதில் பொட்டக்கொல்லையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் காந்தியின் மகன் கலைச்செல்வன் முதல் பரிசையும், பாபு மகன் செல்லத்துரை இரண்டாவது பரிசையும், அர்ஜுனன் மகன் ஆதவன் மூன்றாவது பரிசையும் பெற்றுச்சென்றனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உடையார்பாளையம் காவல் ஆய்வாளர் எஸ் வேலுச்சாமி மற்றும் சிவஞானம்மாள் கல்வி அறக்கட்டளை நிறுவனர் சோழன் க குமார் வாண்டையார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இதில் உடையார் பாளையம் காவல் உதவி ஆய்வாளர் டி திருவேங்கடம், பயிற்சி ஆசிரியர் அருண்வர்மா, வெளியூர் ஆசிரியர்கள் தேவாமங்கலம் சேகர், சங்கர் இலையூர் லோகநாதன், இடங்கண்ணி கிட்டப்பா, சோழன்மாதேவி கண்ணையன், கரடிகுளம் ராஜேந்திர சோழன் மற்றும் சிலம்பக் குழு உறுப்பினர்களும் கிராம பொது மக்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.