தேவாமங்கலம் கிராமத்தில் வெகு சிறப்பாக நடைபெற்ற தீமிதி திருவிழா ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.
தேவாமங்கலம் கிராமத்தில் வெகு சிறப்பாக நடைபெற்ற தீமிதி திருவிழா ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலம்உள்ள திரௌபதி அம்மன், கோவிலில் தீமிதி திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி காப்பு கட்டுதலு டன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், திரௌபதி அம்மன், தருமர், பீமன், அர்ஜுனர், நகுலன், சகாதேவன், கிருஷ்ணர், அரவான் ஆகிய தெய்வங்களுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, வீதி உலா வும் நடைபெற்றது. 30.06.2023 வெள்ளிக்கிழமை இன்று திரௌபதி அம்மன், மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து பூங்கர கம், அக்னி கரகம் ஏந்திய பக்தர்கள் கோவிலில் இருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக வந்தனர். முக்கிய வீதியுலா முடிந்து கோவில் வளாகத்தை நெருங்கியதும் அக்னி குண்டத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டது. இதைய டுத்து அக்னி கரகம் ஏந்தியவாறு தீ மிதித்து தொடங்கி.வைத்த பின்னர், பூங்கரகம் உள்ளிட்ட கரகங்கள் ஏந்தியவர்கள் தீ மிதித்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து வழிபட்டனர். நூற்றுக்கணக்கான தீமிதி விழாவில் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்று வட்டாரத்திய பல்வேறு கிராமங்களில் இருந்து ஏரளானமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.