“5-6 தொகுதிகளில் சரிவு.. ஸ்டாலின் கைகளுக்கு போன உளவுத்துறை “ரிப்போர்ட்”.. அமைச்சர்களுக்கு செக்!
சென்னை: 5-6 தொகுதிகளில் சரிவு இருக்கும். அந்த அமைச்சர்களை வேண்டுமானால் ஸ்டாலின் மாற்றும் வாய்ப்புகள் உள்ளன. அந்த பொறுப்பாளர்கள் மீது அமைச்சரவை மாற்றம் மட்டுமின்றி அங்குள்ள நிர்வாகிகள் மீது கட்சி ரீதியான ஆக்சன் எடுக்கவும் வாய்ப்பு உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் துரை கருணா தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் சரியாக செயல்படாத அமைச்சர்கள் மீது ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலில் சரியாக பணியாற்றாத அமைச்சர்களின் பொறுப்புகளை மாற்ற முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் ரிசல்ட் வந்ததும் இதற்கான முடிவு எடுக்கப்படும். கொடைக்கானலில் இருந்தபடி ஸ்டாலின் லிஸ்ட் ஒன்றை தயார் செய்து வருகிறாராம். அதில், சிறப்பாக செயலாற்றிய அமைச்சர்கள், சிறப்பாக செயலாற்றிய மாவட்ட செயலாளர்கள் ஆகியோரின் லிஸ்டை எடுத்துள்ளார்.திமுகவில் பின்வரும் மாற்றங்கள் தேர்தல் ரிசல்ட் வந்ததும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை மாற்றம் இருக்கும். 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அமைச்சரவை மாற்றம் இருக்கும். புதிய அமைச்சர்கள் ஆட்சியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. இளம் அமைச்சர்கள் பெரும்பாலும் ஆட்சி அதிகாரத்தில் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன. பெரிய அளவில் மாவட்ட செயலாளர்கள் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுகவில் நடக்கும் உட்கட்சி மாற்றங்கள் குறித்து ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் துரை கருணா பேட்டி அளித்துள்ளார். பேட்டி; அதில், திமுக அமைச்சரவை மாற்றப்படலாம். தமிழ்நாட்டில் பல அரசியல் மாற்றங்கள் நடக்க போகிறது. திமுக ஆட்சி கட்சியாக இருக்கிறது. வலிமையான கூட்டணி வைத்துள்ளனர். இதனால் ஒரு இடங்களில் கூட தோற்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். இதை மீறி அந்த கட்சி தோற்க முடியாது. அப்படியும் தோல்வி அடைந்தால் அதன் அர்த்தம் உள்ளடி வேலைகள் என்பதுதான். அதாவது கட்சிக்கு உள்ளேயே சிலர் பார்த்த உள்ளடி வேலைகள் காரணமாக தோல்வி அடைவோமோ என்ற எண்ணம் உள்ளது. நிர்வாகிகள் மட்டத்தில் ஒத்துழைப்பு இல்லை. அதனால் 6-7 தொகுதிகளில் சிக்கல் உள்ளது. சில தொகுதிகள் போகும் என்று கூட ரிப்போட் சென்றுள்ளது. இதுதான் திமுகவை கொதிப்படைய செய்துள்ளது. திமுக சின்னம் போட்டியிட்ட இடங்களில் பிரச்சனை இல்லை. ஆனால் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட இடங்களில்தான் பிரச்சனை வந்திருக்கிறது. அங்குதான் கூட்டணி கட்சிகளுக்கு பெரிதாக திமுகவினர் வேலை பார்க்கவில்லை என்று புகார் சென்றுள்ளது. இதுதான் பிரச்சனைகளுக்கு காரணம். சில தொகுதிகளில் தோல்வியே வரலாம் என்று கூட ரிப்போர்ட் சென்றுள்ளது. உளவுத்துறை சார்பாக ரிப்போர்ட் சென்றுள்ளது. அதோடு இல்லாமல் சபரீசன் நடத்தும் பென் அமைப்பு சார்பாகவும் ரிப்போட் சென்றுள்ளது. அவர்களும் சர்வே நடத்தி உள்ளனர். சில முக்கிய தொகுதிகளில் பொறுப்பாளர்கள், பொறுப்பு அமைச்சர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று ரிப்போர்ட் கிடைத்துள்ளது. 5-6 அமைச்சர்கள் மீது புகார் சென்றுள்ளது. கடைசி கட்டத்தில் செய்த பணிகள் காரணமாக திமுகவிற்கு வெற்றி இருக்கும். 5-6 தொகுதிகளில் சரிவு இருக்கும். அந்த அமைச்சர்களை வேண்டுமானால் ஸ்டாலின் மாற்றும் வாய்ப்புகள் உள்ளன. அந்த பொறுப்பாளர்கள் மீது அமைச்சரவை மாற்றம் மட்டுமின்றி அங்குள்ள நிர்வாகிகள் மீது கட்சி ரீதியான ஆக்சன் எடுக்கவும் வாய்ப்பு உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் துரை கருணா தெரிவித்துள்ளார்