8 தமிழக போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சக விருது அறிவிப்பு!
பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்), மத்திய காவல் அமைப்பு (சிபிஓ) ஆகியவற்றின் 463 பணியாளர்களுக்கு 2024-ம் ஆண்டிற்கான ‘மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கம்’ அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த பணியை அங்கீகரிப்பதற்கும், உயர் தொழில்முறை தரங்களை மேம்படுத்துவதற்கும், பின்வரும் 4 துறைகளில் சம்பந்தப்பட்ட அலுவலர், அதிகாரிகளின் மன உறுதியை அதிகரிப்பதற்கும் இந்தப் பதக்கம் வழங்கப்படுகிறது. சிறப்பு நடவடிக்கை, புலனாய்வு, நுண்ணறிவு, தடய அறிவியல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையின் கீழ், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழிகாட்டுதல் படி, தொடங்கப்பட்ட ‘மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கம்’ அனைத்து காவல்துறையினரின் மன உறுதியைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.