தமிழ்நாடு அரசின் உயிர்ம வேளாண்மைக் கொள்கையில் வலுவான செயல் திட்டங்கள் இல்லை” தமிழர் மரபு வேளாண்மைக் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் கி. வெங்கட்ராமன்,அறிக்கை,
முன்னெடுத்துக்காட்டாகக் கொண்டு கொள்கையில் சேர்க்க வேண்டும்.
நகர்ப்புற மகளிர் குழுக்களையும், உயிர்ம வேளாண்மை உழவர் குழுக்களையும் ஒருங்கிணைத்து, அதற்குரிய செயலிகளின் வழியாக சந்தை வாய்ப்பை விரிவுபடுத்தித் தர வேண்டும்.
நாட்டின ஆடு – மாடு வளர்ப்பையும், கோழி – தேனீ வளர்ப்பையும் ஒருங்கிணைக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தாலும், அதற்கான உறுதியான செயல்திட்டங்கள் அறிவிப்பில் இல்லை.
ஆடு, மாடு மேய்க்கும் கிடைக்காரர்கள் அவற்றில் கிடைக்கும் சாண எருவை நம்பியே வாழுகிறார்கள். சாண எரு தான் உயிர்ம வேளாண்மைக்கு முதன்மையான இடுபொருள். கிடைக்காரர்களையும், உயிர்ம வேளாண்மை உழவர்களையும் ஒருங்கிணைக்க நிறுவன வழிப்பட்ட திட்டங்களுக்கான எந்த அறிவிப்பும் இக்கொள்கை அறிக்கையில் இல்லை.
தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு நிறுவப்படும் என சொல்லப்பட்டிருக்கிறது. மாறாக, தற்சார்பான உயிர்ம வேளாண்மை வாரியம் அமைப்பது தான், உயிர்ம வேளாண்மையை நிலைத்த வழியில் கொண்டு செல்ல உதவி செய்யும்.
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உயிர்ம வேளாண்மை (அங்கக விவசாயம்) கொள்கை அறிக்கையில், மேற்சொன்ன திருத்தங்களையும் மேற்கொண்டு, ஒருங்கிணைந்த வகையில் உயிர்ம வேளாண்மையை முன்னெடுத்துச் செல்ல உறுதியாகச் செயல்பட வேண்டுமென தமிழர் மரபு வேளாண்மைக் கூட்டியக்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.