பள்ளிக்கு வந்த மாணவிக்கு வயிற்று வலி; ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றவர்களுக்கு அதிர்ச்சி!
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி, அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென வயிற்று வலியால் துடித்தார். அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவரது பெற்றோர் சேர்த்தனர். மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறினர். அதை கேட்டு மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில் மேடவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மாணவியின் உறவுக்கார வாலிபரான பெரம்பலூர் மாவட்டம் கோனேரிபாளையத்தைச் சேர்ந்த ரிஷி (வயது 20) மாணவியை காதலித்து வந்துள்ளார். பெற்றோருக்கு தெரியாமல் மாணவியை தனது சொந்த ஊருக்கு அழைத்துச்சென்று கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் மாணவியை அவரது வீட்டில் விட்டுவிட்டார். மாணவியின் பெற்றோர் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்கு சென்று மாணவியுடன் தனிமையில் இருந்ததாகவும், இதில் மாணவி கர்ப்பமானதும் தெரிந்தது. இது தொடர்பாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் தரமணி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.