வடலூர் அருகேஸ்ரீ முருகன், வள்ளி, தெய்வாணை, திருக்கல்யாண உற்சவம்
வடலூர் அருகேஸ்ரீ முருகன், வள்ளி, தெய்வாணை, திருக்கல்யாண உற்சவம்
வடலூர் அருகே உள்ள கருங்குழி கிராமத்தில் ஸ்ரீவிசாலாட்சி உடனுறைகைலாசநாதர் திருக்கோயில் சூரசம்ஹார விழா நேற்று நடைபெற்றது தொடக்கமாக அம்மாவாசை அன்று காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர், தினசரி முருகன் வள்ளி, தெய்வாணைக்கு, அபஷேக ஆராதணை நடைபெற்றது, நேற்று முன்தினம், தாயாரிடம் வேல் பெற்ற முருகன், சூரசம்காரம் செய்தார், இதன் அடிப்படையில் காப்பு கட்டிய ஒன்பது பேர்கள், கோவில் முன் நடப்பட்டு இருந்த கம்பத்தில் ஏறி முருக கடவுளின் கவச பாடல்களை பாடினார்கள், இரவு, முருகன், சூரபத்மன், சூரசம்கார கதை உரையாடல் நடைபெற்றது, பின்னர் முருகன் வீதி உலா நடைபெற்றது, தொடர்ந்து நேற்று இரவு கோயில் வளாகத்தில், முருகன், வள்ளி, தெய்வாணை, திருக்கல்யாணம் நடைபெற்றது, அபஷேக ஆராதணைணயை தொடர்ந்து, பிரசாதமும், அன்னதானமும், வழங்கப்பட்டது. இதனையொட்டி ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்தனர். இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது.