மகா காளி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மகாகாளி அம்மன் கோவிலில் தைப்பூசத்தை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது இதனை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.