தாம்பரத்தில் இருந்த சிறப்பு ரயில் இயக்கம்!
பொங்கல் பண்டிகையின் போது பயணிகளின் கூடுதல் நெரிசலைக் குறைக்க தாம்பரம் – நெல்லை இடையே திருச்சி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதில் வண்டி எண் 06003 தாம்பரத்தில் இருந்து இன்று ( வியாழக்கிழமை), 13, 16-ம் தேதி இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு அதிகாலை 3.5 மணிக்கு வந்து 3.10 புறப்பட்டு செல்லும் இந்த ரயில் மதுரை, தென்காசி, வழியாக நெல்லைக்கு காலை 11.15 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக வண்டி எண் 06004 நெல்லையில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை), 14, 17 ஆகிய தேதிகளில் மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் மாலை 3.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இதேபோல் தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வண்டி எண் 06001 வருகிற 14-ந்தேதி மற்றும் 16-ம் தேதி ஆகிய 2 நாட்களுக்கு காலை 7.30 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு மதியம் 3.40 மணிக்கு வந்து சேரும், பின்னர் தூத்துக்குடிக்கு இரவு 8.30 மணிக்கு சென்றடையும், வண்டி எண் 06002 சிறப்பு ரயில் மறுமார்க்கமாக 15-ம் தேதி மற்றும் 17-ம் தேதி ஆகிய 2 நாட்கள் காலை 6 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு காலை 11.15 மணிக்கு வந்து பின்னர் தாம்பரத்திற்கு இரவு 8.30 மணிக்கு சென்றடையும் என திருச்சி ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.