எஸ்.ஜே.சூர்யா புது கூட்டணி!
நடிகர் விக்ரம், பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். சுதந்திர போராட்ட காலத்தில் கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இதன் திரைக்கதையை பா.ரஞ்சித் உருவாக்கியுள்ளார். இப்படத்தில் இருவேறு கெட்டப்புகளில் விக்ரம் நடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரது நடிப்பில் உருவாகவுள்ள சியான் 62′ படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்து ‘பாத்’, ‘சித்தா’ ஆகிய படங்களை இயக்கி கோலிவுட்டில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள சு. அருண்குமார் ‘சியான் 62’ படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாக படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் விக்ரம், நீண்ட காலங்களுக்கு பிறகு கிராமத்து கேரக்டரில் நடிக்கவுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகம டைந்துள்ளனர். திருத்தணி பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவித் தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். மும்பை கார், தக்ஸ் போன்ற படங்களை தயாரித்துள்ள எச். ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.