பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதையை மூடியதால் இறந்த சடலத்தைபுதைக்க முடியாமல் திண்டாடிய மக்கள், “பெண்களே களமிறங்கி வேலியை உடைத்து அடக்கம் செய்தசம்பவத்தால் பரபரப்பு”
பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதையை மூடியதால் இறந்த சடலத்தைபுதைக்க முடியாமல் திண்டாடிய மக்கள், “பெண்களே களமிறங்கி வேலியை உடைத்து அடக்கம் செய்தசம்பவத்தால் பரபரப்பு”
குறிஞ்சிப்பாடி தாலுக்கா ரங்கநாதபுரம் ஊராட்சியில் நடு காலனி பகுதியில் வசிக்கும் சிவ கொழுந்து தாயார் இறந்துவிட்டதால் அவரின் சடலத்தை சுடுகாட்டில் புதைப்பதற்காக இறுதி ஊர்வலம் தயாரான நிலையில் அதே ஊரைச் சேர்ந்த நிலச்சுவந்தார் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை தடுத்து வைத்திருந்ததால் சடலத்தை அடக்கம் செய்ய முடியாமல் இறந்து போனவருடைய உறவினர்களும் அப்பகுதி மக்களும் இறந்த சடலத்தை நிம்மதியாக கடைசி இறுதி சடங்கை கூட எங்கலால் செய்ய முடியவில்லையே என மிகவும் மன வேதனையில் நடு காலனி பகுதி மக்கள் தீண்டாடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி காவல் துறையினர் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டனர். இது சம்பந்தமாக குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் சுரேஷ்குமார் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதி மக்களிடமும் சம்பந்தப்பட்ட நிலச்சுவந்தாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருதரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு கட்டுப்படாததால் சிறிதுநேரம் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை இருந்து வந்தது. இதைப் பற்றி அப்பகுதி நடுகாலனி மக்கள் அதிகாரிகளிடம் கூறுகையில் நாங்கள் இந்த வண்டிப்பாதையை 150 வருடங்களாக இறந்த சடலங்களை இறுதி சடங்கு செய்ய அடக்கம் செய்வதற்காக சுடுகாட்டுக்கு செல்ல இந்தப் பாதையைத்தான் காலம்காலமாக பயன்படுத்தி வந்தோம் அதே ஊரைச் சேர்ந்த நிலச்சுவந்தார் எங்களுக்கு இந்தப் பாதையை சடலத்தை அடக்கம் செய்வதற்கும், ஆடு மாடுகளை ஓட்டிச் செல்லவும் பாதையை பயன்படுத்தி கொள்ள எந்ததடையும் விதிக்கவில்லை,ஆனால் நிலச்சுவந்தாரின் அவருடைய வாரிசுகள் தற்போது இந்த வழியாக செல்லக்கூடாது என்று வேலி அடைத்து வழிமறித்தது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியியையும் மன வேதனையும் அளிக்கிறது இது மட்டுமல்லாமல் எங்கள் பகுதி மக்கள் அவருடைய வயல்களில் பலபேர் பண்ணை வேலையும் செய்து வருகின்றனர். இத்தனை ஆண்டு காலங்கள் இல்லாமல் இதை ஏன் நிலச் சுவந்தாரின் வாரிசுகள் தடுக்கிறார்கள். என்ன காரணம் என எங்களுக்கும் தெரியவில்லை. எங்களுக்கு வேற எந்தவழியும் இல்லை,அப்படி வேறுவழி பயன்படுத்தவேண்டும் என்றால், பெரிய காலனி வழியாக இரண்டு கிலோமீட்டர் தூரம் சுற்றிச் சென்று தான் சடலத்தை அடக்கம் செய்ய வேண்டும். அப்படி செல்லும்போது அந்த ஊர் பகுதி மக்களும் எங்களுக்கும் சண்டை சச்சரவு ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.ஆகையால் நாங்கள் பல ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த பாதையையே எங்களுக்கு பயன்படுத்தி கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டாட்சியர் சுரேஷ்குமார் அவர்களிடம் நடு காலனி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு வட்டாச்சியர் தெரிவிக்கையில் இன்று ஒரு நாள் மட்டும் இந்த சடலத்தை வேறு வழியாக எடுத்துச் சென்று அடக்கம் செய்யுங்கள் இன்னும் 40 நாட்களுக்குள் உங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தி ஒரு நல்ல தீர்வு ஏற்படுத்தி தருகிறேன் என்று கூறிணார். இதற்கு அப்பகுதி மக்கள் கட்டுப்படாமல் வேறு வழியின்றி பெண்களே களத்தில் இறங்கி வேலியை தள்ளிவிட்டு சடலத்தை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்த அரங்கேரிய சம்பவம் நேற்று நடைபெற்றது. என்ன செய்வதென்று தெரியாமல் வருவாய்த்துறை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் திகைத்து நின்றனர். இதனால் வருங்காலத்தில் மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் சாதி மோதல்களும் ஏற்படாமல் இருக்க, காலம் கடத்தாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அவர்கள் இதற்கு ஒரு நல்ல தீர்வு அளிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் அனைவருடைய எதிர்பார்ப்பு