சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் கிச்சிப்பாளையம் பிரதான சாலை அப் பகுதியில் கல்லாங்குத்து சாலை மின் மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அருகில் தினமும் குப்பைக் கழிவுகள் கொட்டப்படுகிறது.
சேலம் ஜூலை 12
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் கிச்சிப்பாளையம் பிரதான சாலை அப் பகுதியில் கல்லாங்குத்து சாலை மின் மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அருகில் தினமும் குப்பைக் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களும், கடை வைத்திருப்பவர்களும் கடும் இன்னலை சந்திக்க வேண்டியுள்ளது மேலும் இந்தப் பக்கம் செல்லும் சில விஷமிகள் பீடியோ அல்லது சிகிரெட்டோ பிடித்துவிட்டு அனைக்காமல் இந்த குப்பைகள் மீது போட்டால் குப்பை பற்றிஎரியும் போது மின் மாற்றியின் நிலை என்னவாகும் ட்ரான்ஸ்பரமும் பாதிக்கப்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது .
அப்படி ஒரு விபத்து ஏற்பட்டால் அருகில் உள்ள. குடியிருப்புகளும்,கடைகளும் தீக்கு இரையாகும் அபாயம் உள்ளது! இது மட்டுமில்லாமல் இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
இது பற்றி மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தப் பயனும் இல்லை என்று அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகின்றனர், எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனே செயல்பட்டு இந்த இடத்தில் நிரந்தரமாக குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.