வடலூர் ரயில்வே சுரங்கபாதையில். மழைநீர் நிரம்பியதால் பொதுமக்கள் அவதி
வடலூர் ரயில்வே சுரங்கபாதையில். மழைநீர் நிரம்பியதால் பொதுமக்கள் அவதி
(எப்படித் தாண்டுவது போராட்டத்தில்தான் போகணும் போல குழம்பும் மக்கள்)
கடலூர், மாவட்டம்
வடலூர் சேராக்குப்பம் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது
சேராக்குப்பம் மற்றும் ஆபத்தாரனபுரம் பகுதியில் இருந்தும், வடலூர் நகர பகுதியில் பாதுகாப்பு கருதிம் பொதுமக்கள் இந்த ரயில்வே சுரங்கப்பாதையை கடந்து இளங்கோ நகர் வழியாக குறிஞ்சிப்பாடி பகுதிக்கு தினமும் சென்று வருகின்றனர், இந்நிலையில் சில நாட்களுக்கு முன் பெய்த மழையினால் ரயில்வே சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளது, சுரங்கப்பாதையை கடக்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தண்ணீர் அதிக அளவில் உள்ளதால் தண்ணீரில் சிக்கிக் கொண்டு அடிக்கடி பழுதாகி வருகின்றது, இதனால் ரயில்வே சுரங்கப் பாதையை பொதுமக்கள் பயன்படுத்தாமல் தவிர்த்து வடலூர் வழியாக குறிஞ்சிப்பாடிக்கு சென்று வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் பயன்பாடு இன்றி கிடக்கும் ரயில்வே சுரங்கப்பாதை என்பதால் சமூகவிரோதிகள் இரவு நேரங்களில் மது அருந்துவது உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. பல கோடி ரூபாய் செலவில் பொதுமக்கள் பாதுகாப்பான வகையில் ரயில்வே பாதையை கடப்பதற்காக ரயில்வே துறை சார்பில் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை பொதுமக்கள் பயன்பாடு இன்றி மழைநீர் சூழ்ந்து காணப்படுவதாக கூறப்படுகிறது
கடந்த சில மாதங்களுக்கு முன்பு காடாம்புலியூர் பகுதியில் இருந்து முந்திரி தொழிற்சாலக்கு வேலைக்கு அழைத்து
சென்று திரும்பிய வேன் ஒன்று
வேலையாட்களுடன் தண்ணீர் சூழ்ந்துள்ள சுரங்கப் பாதையை கடந்த பொழுது நடுவே சிக்கிக்கொண்டது, பின்னர் வேனில் இருந்த பெண்கள் கூச்சலிடவே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வேனை தீயணைப்பு துறை உதவியுடன் மீட்டனர்,
இது போன்ற பல சம்பவங்கள் இச் சுரங்கப்பாதையை கடக்கும் பொழுது நடப்பதாக கூறப்படுகிறது
எனவே ரயில்வே நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி சுரங்கப்பாதையில் சூழ்ந்துள்ள மழை நீரை விரைந்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.