வடலூர் கருங்குழி கிராம சபைக்கூட்டத்தில் கூச்சல் குழப்பம், பரபரப்பு
- வடலூர் கருங்குழி கிராம சபைக்கூட்டத்தில் கூச்சல் குழப்பம், பரபரப்பு
கடலூர், மாவட்டம்
வடலூர் அருகே கருங்குழி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி தலைமையில்
நடைபெற்றது, கூட்டத்தில்அரச அலுவலர்கள், பஞ்சாயத்து , வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் , கூட்டம் தொடங்கிய சில மணித்துளியில், அடிப்படை வசதியான, குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதியில்லை, எனத் தொடங்கிய விவாதம், தலித் மக்கள் வசிக்கும்பகுதி தெருக்களில், மேடு பள்ளமாகஇருக்கிறது, கட்டிய சிறு பாலத்தில்,”தண்ணீர் வடியவில்லை, தண்ணீரும், சாக்கடையும் தேங்கி, கொசுக்கள் பெருகி, டெங்கு பரவும் எனவும், ஊர் பொது இடத்தில் மண் எடுத்து விற்க கூடாது, எனவும்,
இளைஞர்கள் விளையாடும் இடத்தை இடம் மாற்றக்கூடாது, ஊரின், இருபுறமும், கட்டப்பட்டுள்ள, பொதுகழிப்பறைகள் பூட்டி வைத்துள்ளதால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உடனே திறந்துவிட வேண்டும், ஆக்கிரமிப்பால், அகற்ற உள்ள மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும், என சரமாரியாக, பொதுமக்கள் ஒரே சமயத்தில்
கேள்வி எழுப்பியதால் கூச்சல் குழப்பமும்,வாக்குவாதமும், பரபரப்பும்ஏற்பட்டது.