பிரசித்திபெற்ற ‘சனீஸ்வரர் கோவில்’ பேஸ்புக் பக்கத்தில் ஆபாச படம்; பக்தர்கள் அதிர்ச்சி!!!
காரைக்கால் திருநள்ளாறில் பிரசித்திபெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு என்று தனியாக பேஸ்புக் பக்கம் உள்ளது. இதில் கோவிலில் நடைபெறும் விழாக்கள், பூஜைள் விவரம், கோவில் வரலாறு மற்றும் சாமியின் புகைப்படங்கள பதிவிடப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கோவிலின் முகநூல் பக்கத்தை மர்மநபர்கள் ‘ஹேக்’ செய்து அந்த கணக்கில் ஆபாச புகைப்படங்களை பதிவிட்டனர். இதனை பார்த்த பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் முகநூல் பக்கத்தில் இருந்த ஆபாச படத்தை சைபர் கிரைம் போலீசார் உடனடியாக நீக்கினர். மேலும் கோவிலின் முகநூல் பக்கத்தை ஹேக் செய்து இந்த மோசமான செயலில் ஈடுபட்டவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.