*நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் என்.எல்.சி நிறுவனம் முறையான மின்சாரம் வழங்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் இதனால் 20 நிமிடம் கடலூர்- விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் திருவள்ளுவர் நகர், பெரியார் நகர், பட்டுஐயர் காலனி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் அப்பகுதி மக்கள் என்எல்சி மின்சாரத்தை கொக்கி போட்டு பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர் இந்த நிலையில் என்எல்சி நிறுவனம் அப்பகுதியில் கடந்த ஏழு நாட்களாக மின்சாரத்தை துண்டித்துள்ளனர் அப்பகுதி மக்கள் இது குறித்து என்எல்சி நிறுவனத்திடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மந்தாரக்குப்பம் பகுதியில் கடலூர்– விருத்தாசலம் சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர் இதனை அறிந்த மந்தாரக்குப்பம் போலீசார் மற்றும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பின்னர் அப்பகுதி மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர் இதனால் கடலூர் – விருத்தாசலம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.