ஈசிஆர் போறீங்களா? நித்ய கல்யாண பெருமாள் கோயில் இருக்குல்ல? அங்கே ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது
சென்னை: நித்ய கல்யாண பெருமாள் கோயில் பற்றின அருமை பெருமை தெரியுமா? இதை பற்றின குட்நியூஸ் ஒன்று வெளியாகி உள்ளது.. தமிழக இந்துசமய அறநிலையத்துறை, விரைவில் இந்த இனிப்பு செய்தியை அறிவிக்க போகிறது.. என்ன தெரியுமா?
எத்தகைய தோஷத்தினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சரி, ஒருமுறை திருவிடந்தை சென்றுவந்தால், திருமணம் கைகூடும் என்பார்கள்.. நீண்ட காலமாக, கல்யாணமாகாமல் இருப்பவர்களை, இங்கு சென்று வேண்டிகொள்ள சொல்வார்கள்.
மாமல்லபுரம்: மாமல்லபுரம் செல்லும் சாலையில் திருவிடந்தை என்ற திருத்தலம் உள்ளது.. லட்சுமியை தன்னுடைய இடது தோளில் ஏந்தியபடி காட்சி தருகிறார் நித்ய கல்யாணப் பெருமாள்… கைகளை இடப்பக்கம் ஏந்திய திருத்தலம் என்பதால் “திருஇடந்தை” என்று பெயர் வந்ததாம்.. இதுவே திருவிடந்தை என்று மாறிவிட்டதாம்.
இந்த கோயிலுக்கு, திருமணம் ஆகாத ஆண், பெண்கள், குடும்பத்தினருடன் சென்று, பூ மாலையால் சுவாமிக்கு அர்ச்சனை செய்ய கொடுக்க வேண்டும்.. அர்ச்சனை முடித்ததும் அந்த மாலையை தருவார்கள். அதை வாங்கி கழுத்தில் போட்டுக்கொண்டு, கோவிலை 9 முறை வலம் வர வேண்டுமாம்..
கொடிகம்பம்: பிறகு, கொடிக்கம்பம் முன்பு விழுந்து வணங்கி, அந்த மாலையுடன் நேராக வீட்டிற்கு போக வேண்டும். வீட்டு பூஜை அறையில் மாலையை வைத்துவிட வேண்டும்.. திருமணம் முடிந்ததுமே, தம்பதியராக வந்து அந்த மாலையை கோவிலில் சேர்த்துவிட வேண்டும். இதற்காகவே, கோவில் பின்புறம் ஒரு மரம் இருக்கிறதாம்.. இதுதான் காலம் காலமாக நடந்துவரும் பரிகார முறையாகும்.
இப்போது விஷயம் என்னவென்றால், இந்த நித்யகல்யாண பெருமாள் கோயில் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும்நிலையில், கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ4.30 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி நிறைவடைய போகிறதாம்..
திருமண மண்டபம்: நித்யகல்யாண பெருமாள் கோயிலுக்கு சொந்தமான, ஈசிஆர் சாலையொட்டி உள்ள 4 ஏக்கர் இடத்தில், திருமண மண்டபம் கட்டப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.. இதையடுத்து, இந்த திருமண மண்டபம் கட்டுவதற்காகவே, இந்து சமய அறநிலைய துறை சார்பில் ரூ4.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த 2022ம் ஆண்டு, இந்த மண்டபம் கட்டும் பணியை முதல்வர் ஸ்டாலின் துவக்கியும் வைத்திருந்தார்.
இதையடுத்து, பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், சில நிர்வாக காரணங்களுக்காக பணிகள் தடைபட்டது. இதற்கு பிறகுதான், அமைச்சர் சேகர்பாபு உடனடியாக இதில் தலையிட்டு, கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மகிழ்ச்சி: இப்போது, திருமண மண்டபம் கட்டும் பணிகள் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டதாம்.. இன்னும் 2 மாதத்தில், இந்த கல்யாண மண்டபம் பயன்பாட்டுக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள் அதிகாரிகள். இந்த தகவல் பக்தர்களுக்கு பெருத்த மகிழ்ச்சியை தந்துவருகிறது