பிப்ரவரி21ந்தேதி,முதல்வர் கழக தலைவர் ஸ்டாலின், கடலூர் மாவட்டத்திற்கு வருகை தரும்போது,சிறப்பான வரவேற்பளிப்பது
பிப்ரவரி21ந்தேதி,முதல்வர் கழக தலைவர் ஸ்டாலின், கடலூர் மாவட்டத்திற்கு வருகை தரும்போது,சிறப்பான வரவேற்பளிப்பது
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக்கூட்டம், வடலூரில் தனியார்திருமணமண்டபத்தில்,கழக தேர்தல் பணிக்குழு செயலாளர்இளபுகழேந்தி தலைமையில்,கழக செய்தி தொடர்பு இணை செயலாளர்,
தமிழன்பிரசன்னா ,கழக இளைஞர் அணிதுணை செயலாளர், அப்துல்மாலிக் கழக இளைஞர் அணி சமூக வலைதள பயிற்சியாளர்.
இளமாறன் ஆகியோர் முன்னிலை நடைபெற்றது.
கூட்டத்தில்வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும்,கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான.எம் ஆர் கே பன்னீர்செல்வம் சிறப்பு உரையாற்றினார்
கூட்டத்தில் கழக பொறியாளர் அணி தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரை.கி.சரவணன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மாநரக மேயர் சுந்தரிராஜா, தொகுதி பார்வையாளர்கள் சிதம்பரம்பாரிபாலன், புவனகிரி-எம்.எம்.சிவா, மாவட்ட துணை செயலாளர்கள் சக்திவேல், சுதாசம்பத், ஒன்றிய செயலாளர்கள்: காட்டுமன்னார்கோவில் மேற்கு அ.முத்துசாமி, குறிஞ்சிப்பாடி தெற்கு ஒன்றிய வி.சிவக்குமார், குறிஞ்சிப்பாடி வடக்கு ஆர்.நாராயணசாமி, திருமுட்டம் கிழக்கு தங்க.ஆனந்தன், கடலூர் மாநகர செயலாளர்: கே.எஸ்.ராஜா, வடலூர் நகர கழக செயலாளர்
தமிழ்ச்செல்வன், வடலூர் நகரமன்றத்தலைவர் சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள்: கே.பி.ஆர்.பாலமுருகன், ஆகியோர் கலந்துக் கொண்டனர், மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் 1,
இந்திய துணைக் கண்டத்து முதல்வர்களில் நம் தலைவர் தளபதி முக ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் 1 அன்று கடலூர் கிழக்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மாணவ, மாணவியர் நலன்கள், மருத்துவ முகாம்கள் என கடலூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், 395 ஊராட்சி, 267 வார்டு ஆக மொத்தம் 662 இடங்களில் கழக கொடியேற்றி அனைத்து கழக நிர்வாகிகளும், கிளைக் கழகங்களிலும், அணிகளின் சார்பிலும் சிறப்பாக கொண்டாடுவது
தீர்மானம் 2
முதல்வர் கழக தலைவர் ஸ்டாலின், கடலூர் மாவட்டத்திற்கு வருகை தரும் பிப்ரவரி21ந்தேதி வெள்ளிக்கிழமை, பிப்ரவரி22. ந்தேதி சனிக்கிழமை
வரவேற்பு, கழக நிகழ்ச்சியில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களில் கடலூர் கிழக்கு மாவட்ட கழகம் அறிவித்திடும் வண்ணம் மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர்கேபன்னீர்செல்வம் தலைமையில் கடலூர் கிழக்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து அனைவரும் கலந்துக் கொள்வது.
தீர்மானம் 3
கழக இளைஞர் அணி செயலாளர், துணை முதல்வர் செயலாற்றல் வடிவமாக மக்களால் வரவேற்கப்படும் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்புபடி கடலூர் கிழக்கு மாவட்டத்திலுள்ள கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிகளில் கழக நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திடும் பாக முகவர்கள், தேர்தல் களம் காண இளைஞர்களுக்கு சிறப்பான சமூக வலைதள பயிற்சியாளர்களை கொண்டு சமூக வலைதள பயிற்சிக் கூட்டம் நடத்துவது .
தீர்மானம் 4
தமிழ்நாட்டை, ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கையில் முழுவதுமாக புறக்கணித்துள்ளது கண்டித்து தொடர்ந்து தமிழக முதல்வர் அரசு மூலமாகவும், நேரிலும், கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமும் வைத்துள்ள கோரிக்கைகளையும் செய்திடாமல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து வருவதை மக்கள் முன் வெளிப்படுத்திட மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்திட அறிவித்துள்ளார். கடலூர் கிழக்கு மாவட்டத்தில் தலைமைக் கழக அறிவிப்பின்படி பிப்ரவரி8ந்தே சனிக்கிழமை அன்று வடலூர் நாகரில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர், கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில், கூட்டம் நடத்துவது
தீர்மானம் 5
கழக இளைஞர் அணி சார்பில் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கடலூர் கிழக்கு மாவட்டம் முழுவதும் களத்தில் சிறப்பாக செயல்படுவது, திராவிட மாடல் அரசின் சாதனைகளை சமூக வலைதளம் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் சிறப்பாக செயல்பட வேண்டும் என தீர்மானிக்கப்படுகிறது.