மருத்துவ முகாம் மூலம் காய்ச்சல் கண்டவர்களுக்கு சிகிச்சை
மருத்துவ முகாம் மூலம் காய்ச்சல் கண்டவர்களுக்கு சிகிச்சை
கடலூர்மாவட்ட சுகாதார அலுவலர் உத்தரவின் பேரில் வடலூர் வட்டாரத்திற்குட்பட்ட ஆலப்பாக்கம் கிராமத்தில் டெங்கு பாதிப்பு ஏற்பட்ட பகுதியில், கொசு ஒழிப்பு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கொண்டு வீடு வீடாக கொசுப்புழு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது, நடமாடும் மருத்துவ முகாம் மூலம் காய்ச்சல் கண்டவர்களுக்கு சிகிச்சை அளித்து நிலவேம்பு கஷாயம் மற்றும் பப்பாளி இலைச்சாறு வழங்கப்பட்டது. மேலும் ஊராட்சி சார்பில் ஆலப்பாக்கம் கிராமத்திற்கு உட்பட்ட வீடுகளுக்கு கொசு மருந்து அடிக்கப்பட்டது. குறிஞ்சிப்பாடி வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர்ரேவதி நேரில் களப்பணியை பார்வையிட்டு பொதுமக்களுக்கு டெங்கு பற்றிய விழிப்புணர்வு அளித்தார். இதில் குறிஞ்சிப்பாடி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கொளஞ்சியன், சுகாதார ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் திருமாலன் ஆகியோர் ஈடுபட்டனர்.