வாகன சோதனை மோட்டார் சைக்கிள் விட்டு விட்டு தப்பி ஓடிய மர்ம நபரால், வடலூரில்பரபரப்பு
வாகன சோதனை மோட்டார் சைக்கிள் விட்டு விட்டு தப்பி ஓடிய மர்ம நபரால், வடலூரில்பரபரப்பு
வடலூர் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் அறிவுறுத்தலின் பேரில், சப்இன்ஸ்பெக்டர் ராஜாங்கம்
மற்றும்போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர், வடலூர் என் எல்சி ஆபிசர் நகர், ஜெயபிரியா நகர் பகுதி
நேற்று இரவு ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் இருட்டில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தார்.
இதனை தொடர்ந்து போலீசார் சந்தேகம் அடைந்து அந்த நபரிடம் விசாரணை நடத்துவதற்காக கூப்பிட்டனர்,
அப்போது உடன்அந்த நபர் திடீரென்று போலீசை பார்த்ததும் மோட்டார் சைக்கிள் மற்றும் கைப்பை ஒன்றையும், விட்டுவிட்டு தப்பித்து ஓடினார்.
இதில் சந்தேகம் அடைந்த
போலீசார் அந்த வாலிபரை வளைத்துபிடிக்க முயன்றும் முடியவில்லை. இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிள்
மற்றும் கைப்பை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து வடலூர்
போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
அந்த கைப்பையை சோதனை செய்தபோது ரூ.10ஆயிரம் மதிப்புள்ள, பட்டுப்புடவை மற்றும் கதவை உடைக்க உதவும்வகையில் கம்பிகள், கையுறைகள் போன்றவை இருந்தது தெரிய வந்தது. மேலும் மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளா? அல்லது சம்பந்தப்பட்ட நபரின் மோட்டார் சைக்கிளா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வடலூர் பகுதியில் வீட்டின் கதவை உடைத்து திருடுவதற்கு தயாராக இருந்த நபரை போலீசார் சோதனையின் போது பிடிக்க முயன்று தப்பித்து சென்ற நபரை தொடர்ந்து தேடி வருகிறார்கள், இச்சம்பவம் வடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது