ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் – மகள்; காரணம் என்ன?

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் எம்.பி.நகர் படாவனே பகுதியில் வசித்து வந்தவர் சுமலதா(வயது 45). இவரது மகள் வர்ஷா(வயது 22). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று மாலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றனர். மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவர்களது குடும்பத்தினர் அவர்களை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இதையடுத்து அவர்கள் இதுபற்றி சகாபாத் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் சகாபாத் அருகே ஓடு காகினா ஆற்றில் 2 பெண்களின் உடல்கள் மிதந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சகாபாத் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆற்றில் இருந்து அந்த 2 பெண்களின் உடல்களை மீட்டனர். அதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் மாயமான சுமலதா, வர்ஷா ஆகிய 2 பேர் என்பதும், அவர்கள் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. ஆனால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial