“மகன் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை” மகனின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை என உருக்கம்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெள்ளமடம் பகுதியில் உள்ள சகாயநகர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் போவாஸ் தேவ சோபனம் (வயது 70). இவருடைய மனைவி செல்வரெத்தினம் (67) இவர்களுக்கு 3 மகன்கள், 1 மகள் இருந்தனர். இதில் 2-வது மகன் ஆஸ்டின் போவாஸ் (40). திருமணமாகாத இவர் கடந்த அக்டோபர் மாதம் 5-ந் தேதி உடல்நலக்குறைவால் திடீரென இறந்து விட்டார். இந்த மகன் மீது செல்வரெத்தினம் மிகவும் பாசமாக இருந்தார். மகனின் இழப்பை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மூத்தமகன் வீட்டுக்கு செல்வ ெரத்தினத்தை தவிர அனைவரும் சென்று விட்டனர். மாலையில் மீண்டும் வீடு திரும்பிய போது குடும்பத்தினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.அங்குள்ள ஒரு அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் செல்வரெத்தினம் பிணமாக கிடந்தார். அந்த உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.உருக்கமான வாசகம்சாவதற்கு முன்பு செல்வரெத்தினம் எழுதி வைத்த உருக்கமான வாசகம் சிக்கியது. அதனை அவர் தனது கையில் எழுதியுள்ளார். அதில், மகனின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை என எழுதப்பட்டிருந்தது. இதனால் மகன் இறந்த துக்கத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது.மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.