நாடும் நமதே… நாளையும் நமதே… முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
-
ஈரோடு கிழக்கில் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது, மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது.நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற இன்றே தொண்டர்கள் களமிறங்க வேண்டும்.
-
மதத்தை, சாதியை பயன்படுத்தி கலவரத்தை ஏற்படுத்தலாம், அதன் மூலமாக திமுக ஆட்சியை வீழ்த்திவிடலாம் என்று சிலர் முயற்சிக்கிறார்கள்.இதற்கெல்லாம் செவி சாய்க்காமல், எதைப்பற்றியும் கவலைப்படாமல், நாடாளுமன்ற தேர்தலை மட்டும் இலக்காக வைப்போம்.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியையும் இழந்தோம். இந்த முறை நாற்பதுக்கு நாற்பதிலும் வெற்றி பெற வேண்டும்.நாடும் நமதே… நாளையும் நமதே…- கோவையில் மாற்றுக் கட்சியினர் திமுக இணைந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு