வடலூரில், அரிமா சங்கம் சார்பில் இலவச இருதய பரிசோதனை முகாம் .
வடலூரில், அரிமா சங்கம் சார்பில் இலவச இருதய பரிசோதனை முகாம்
- கடலூர் மாவட்டம் வடலூர் சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சீயோன் பள்ளியில் மாபெரும் இலவச இருதய சிகிச்சை முகாம் நடைபெற்றது,
வடலூர் அரிமா சங்கதலைவர் ஜிஎஸ் ஆட்டோமொபைல்,கண்ணன் தலைமையில் நடைபெற்ற முகாமில், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பொதுமக்களுக்கு இருதைய நோய்களை கண்டறியும், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது,
மேலும் இசிஜி ,எக்கோ, சர்க்கரை நோய் கண்டறிதல், ரத்த கொதிப்பு ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மேல் சிகிச்சை தேவை இருப்பின் அவர்கள் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மூலம் இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,
இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட அரிமா சங்கத் தலைவர் டிஆர்எம் சாந்தி ஏஜன்சி அதிபர் ராஜாமாரியப்பன், வடலூர் அரிமா சங்க செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் சின்னப்பராஜ்,மாவட்ட அரிமா சங்க தலைவர்கள் சங்கீதா ஸ்டீல் அதிபர்சந்திரகாசு, ராஜேந்திரன், வெங்கடேஸ்வரா மரவாடி அதிபர், பிரம்மநாயகம்,ஓட்டல்கலைச்செல்வன்,ஞானசேகரன் முருகன், வட்டாரத் தலைவர் ராமதாஸ், சீயோன் பள்ளியின் நிர்வாகி, பிரவீன் சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.