மாற்றுதிறனாளி, வெற்றிக்கதைகள் கடலூர் மாவட்டம்
மாற்றுதிறனாளிகள் வெற்றிக்கதைகள் கடலூர் மாவட்டம்
மாற்றுதிறனாளிகள் நலன் கருதி பல்வேறு திட்டங்களை வகுக்கும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கடலூர் மாவட்டம்
மாற்றுத்திறனாளி பயனாளிகள் தங்களின் நெஞ்சார்ந்த நன்றியை
மீது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றது முதல்
மக்கள் நலன் கருதி அனைத்து துறைகளின் வாயிலாக எண்ணற்ற
திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர், அவ்வகையில் மாற்றுதிறனாளிகள்
சுயதொழில் புரிந்து பொருளாதாரத்தில் மேம்பாடு அடையவும், அவர்கள்
வாழ்க்கைத்தரம் உயரவும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து
வழங்கப்படுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்
ஆணைக்கினங்க கடலூர் மாவட்டத்தில் மன வளர்ச்சி குறைய,
கடுமையாக பாதிக்கப்பட்ட, தொழுநோயால் பாதிக்கப்பட்ட, தசை சிதைவு
நோயால் பாதிக்கப்பட்ட, முதுகு தண்டுவடத்தில் பாதிக்கப்பட்ட கால்கள்
செயலிழந்த, அபார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு
பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.1500 வழங்கப்பட்டது
உயர்த்தி ரூ.2000ஆக வழங்கப்படுகிறது, இத்திட்டத்தில் இதுவரை
8,335 பயனாளிகளுக்கு ரூ.30 கோடியே 6 இலட்சத்து 71 ஆயிரத்து 250
ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மாற்றுத்திறனாளிகளின் குடும்ப வாழ்க்கை தரத்தினை
மேம்படுத்தும் வகையில் பார்வையற்ற, செவித்திறன் பாதிக்கப்பட்ட, கை,கால்
பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம்
செய்வதற்கும், மாற்றுத்திறனாளியை மாற்றுத்திறனாளி திருமணம்
செய்வதற்கும் திருமண உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் 44 நபர்களுக்கு ரூபாய் 18 இலட்சம் வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் கல்வி தரத்தினை உயர்த்திடும் வகையில் 1ஆம்
வகுப்பு முதல் முதுநிலை பட்ட படிப்பு வரை மாற்றுத்திறனாளி மாணவ/
மாணவியர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை, பார்வையற்ற
மாற்றுத்திறனாளிகளுக்கு வாசிப்பாளர் உதவித்தொகையும் வழங்கப்பட்டு
வருகிறது.இத்திட்டத்தில்
மாற்றுத்திறனாளி
மாணவ/
மாணவியர்களுக்கு ரூ.58 இலட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டிலும், சிறு மற்றும்
குறு தொழில் சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் மான்யம் திட்டத்தில் கடன்
பெறும் தொகையில் 3ல் ஒரு பகுதி அல்லது ரூ.25 ஆயிரம் மிகாமல் மான்யம்
வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 130 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.31
இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான மூன்று சக்கர சைக்கிள்,
சக்கர நாற்காலி, மூளை முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான
சிறப்பு சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள், நடைகருவிகள், பேட்டரியால்
இயங்கும் சக்கர நாற்காலி, காதொலி கருவிகள், கைப்பேசி,
பார்வையற்றோருக்கான மடக்கு குச்சி, கருப்பு கண்ணாடி, பிரைலி கை
கடிகாரம், உருப்பெருக்கி வழங்கப்பட்டு வருகிறது. இதில் 1,343
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1கோடியே 2 இலட்சத்து 34ஆயிரம் மதிப்பீட்டில்
உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில்
இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் உள்ள
மாற்றுத்திறனாளிகளுக்கும், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு இரண்டு
கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் இணைப்பு சக்கரம்
பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில்
210 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1கோடியே 85இலட்சத்து 76ஆயிரம் மதிப்பில்
பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது. மேற்குறிய திட்டங்களின் வாயிலாக
11,632 பயனாளிகளுக்கு ரூ.34 கோடியே 2 இலட்சத்து 51ஆயிரத்து 250
மதிப்பீட்டில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற திட்டங்களின் வாயிலாக பயனைடந்த பயனாளி திரு.முருகன்அவர்கள் கூறியதாவது.
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட புதுப்பாளையம் பகுதியில் நான் வசித்து
வருகிறேன். 19 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப வறுமையின் காரணமாக
பெய்ண்ட்டர் வேலைக்கு செல்லும்போது கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து
முதுகு தண்டுவடத்தில் அடிப்பட்டு இரண்டு கால்களும் உணர்ச்சியற்ற
நிலையில் எந்த வேலைக்கும் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலே
முடங்கியிருந்த
முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட
மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல்
ஸ்கூட்டர் வழங்கிட மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையிலான மருத்துவ
தேர்வுக் குழு மூலம் அரசு விதிமுறைகளின்படி என்னை தேர்வு செய்து, அரசுநிகழ்ச்சின் வாயிலாக மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், மாண்புமிகு தொழிலாளர் நலன்மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர்எனக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கினர்.இதன் உதவியுடன் Data Entry பணிசெய்து, எனது குடும்பத்தையும் எனது வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திவருகிறேன். இத்திட்டத்தை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்அவர்களுக்கு என் சார்பாகவும் எனது குடும்பத்தின் சார்பாகவும் மனமார்ந்தநன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொகுப்பு
ஜெ.பாலமுருகன்
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்(கூ/பொ),
கடலூர் மாவட்டம்