கல்கி 2898 ஏ.டி படத்தின் தீம் வெளியீடு!
இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிடவர்களின் நடிப்பில், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் கல்கி 2898 ஏ.டி படத்தின் தீம் இசைக்கோர்வை சென்னையில் நடந்த சந்தோஷ் நாராயணனின் நீயே ஒளி இசை நிகழ்ச்சி சந்தோஷ் நிகழ்ச்சியில், ரசிகர்களுக்காகப் பிரத்யேகமாக அரங்கேற்றப்பட்டது. இப்படம் புராணக் இப்படம், புராணக் கதைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் நடைபெறும் அறிவியல் புனைவு படைப்பாக உருவாகி வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கிளிம்ப்ஸ் ஒரு அசாதாரணமான சினிமா அனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு வழங்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இப்படம் வரும் மே மாதம் 9 ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.